பதிவு செய்த நாள்
08 மார்2013
00:13

புதுடில்லி:கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசின் முகமை அமைப்புகள், விவசாயிகளிடம் இருந்து, கோதுமையை கொள்முதல் செய்கின்றன. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் கோதுமை, அரசின் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
கையிருப்பு:சென்ற பிப்ரவரி, 1ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் கிடங்குகளில், 3.08 கோடி டன் கோதுமை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில் இருந்து, நடப்பு பருவத்திற்கான கோதுமை அறுவடை துவங்க உள்ளது. இதனால், அரசின் கிடங்குகளில், கோதுமை கையிருப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தேவையை விட, கோதுமை கையிருப்பு அதிகம் உள்ளதால், மத்திய அரசு, 45 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது.
இதுவரை, ஒரு டன் கோதுமை, 295-330 டாலர் என்ற விலையில், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.சென்ற வேளாண் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, முன் எப்போதும் இல்லாத, சாதனை அளவாக, 9.48 கோடி டன்னை எட்டியது. இதன் உற்பத்தி, நடப்பு பருவத்தில், 9.23 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள உபரி கையிருப்பு மற்றும் புதிய வரத்து போன்ற காரணங்களால், கிடங்குகளில் கோதுமையை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொள்முதல்:இதை கருத்தில் கொண்டு, கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.மத்திய அரசு, வரும் 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஏப்.,-மார்ச்), 4.40 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|