பதிவு செய்த நாள்
08 மார்2013
14:44

அமெரிக்காவைச் சேர்ந்த, ஃபோர்டு கார் நிறுவனம், இந்தியாவில், ஃபிகோ, கிளாஸிக் உள்ளிட்ட பல மாடல் கார்களையும், எஸ்.யு.வி., பிரிவில், 'என்டீவர்' காரையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது, 'என்டீவர்' காரில், புது வேரியன்டை அறிமுகப்
படுத்தியுள்ளது. 'என்டீவர் ஆல் டெரின் எடிஷன்' என்ற பெயரில், புதிய கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.23.2 லட்சம்(எக்ஸ்ஷோரூம், டில்லி). புதிய காரின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டச் ஸ்கிரீன் ஜி.பி.எஸ்., ஆடியோ கண்ட்ரோல் வசதி கொண்ட ஸ்டியரிங், பவர் விண்டோஸ் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காரில், 3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|