பதிவு செய்த நாள்
09 மார்2013
03:49

புதுடில்லி : இந்திய நிறுவனங்கள், சென்ற ஜனவரியில், தனிப்பட்ட முறையில் கடன் பத்திரங்களை வெளியிட்டு, 39,025 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இது, முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள், அவற்றின் மூலதன தேவைக்காக, நிதி நிறுவனங்களுக்கான, 259 கடன் பத்திர வெளியீடுகள் மூலம், மேற்கண்ட தொகையை திரட்டிக் கொண்டு உள்ளன.இதற்கு முன் கடந்த, 2012ம் ஆண்டு ஜூலை மாதம், 202 கடன் பத்திர வெளியீடுகள் மூலம், 57,745 கோடி ரூபாய் திரட்டப்பட்டது தான், அதிகபட்ச தொகையாக இருந்தது.
சென்ற ஆண்டு டிசம்பரில், 176 கடன் பத்திரங்கள் வாயிலாக, 26,239 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், இந்திய நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுக்கான, கடன் பத்திரங்கள் மூலம், 3.02 லட்சம் கோடி ரூபாயை திரட்டிக் கொண்டு உள்ளன.
சென்ற, 2011-12ம் முழு நிதியாண்டில், 2,048 கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 3,02,668 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது என, செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|