பதிவு செய்த நாள்
09 மார்2013
03:51
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து ஏற்றுமதி செய்யும், அரிய வகை சிங்கி இறால்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. புதுச்சேரி பகுதியில் இருந்து, சிங்கி இறால்கள் (டூணிஞண்tஞுணூ) ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடலில் பிடித்து எடுத்து வந்து, சோலைநகரில் தொட்டிகளில் பராமரித்து, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய துறைமுகங்கள் வாயிலாக, இவை, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடலில் குறைந்தது, 40 முதல் 50 கி.மீ., தொலைவிற்கு சென்றால் கிடைக்கும். இந்த இறால்களின் எடை, 2 முதல் 4 கிலோ வரை இருக்கும். ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து, 6 மாதங்களுக்கு, இந்த இறால் வரத்து அதிகம் இருக்கும். தற்போது சீசன் இல்லாததால், ஏற்றுமதி பெருமளவில் குறைந்து விட்டது. வழக்கமாக பெரிய சிங்கி இறால்கள் கிலோ, 3,500 ரூபாய் வரையிலும், சிறியவை, 1,300 ரூபாய் வரையிலும் விற்கப்படும்.தற்போது சீசன் இல்லாததால், பெரிய இறால்கள் அதிகபட்சமாக, 2,500 ரூபாய் வரையும், சிறியவை அதிக பட்சமாக, 1,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|