பதிவு செய்த நாள்
09 மார்2013
09:13

புதுடில்லி: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடில்லியில் முற்றிலும் பெண்களால் இயக்கப்படும் முதல் தபால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தபால் நிலையத்தை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கபில் சிபல் துவக்கி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது மத்திய நிதியமைச்சர் பெண்களால் இயக்கப்படும் வங்கிகள் நாடு முழுவதும் திறக்கப்டும் என்று அறிவித்தார். இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக முற்றிலும் பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் மத்திய டில்லியில் திறக்கப்பட்டு்ள்ளது. மூன்று கவுண்டர்கள் கொண்ட இந்த தபால் நிலையத்தில் இரண்டு கவுண்டர்களில் ஸ்பீடு போஸ்ட் , பதிவு தபால், போஸ்டல் ஆர்ட்ர்கள், மணியார்கள் புக் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும்.மீதமுள்ள ஒரு கவுண்டரில் ஸ்டாம்பு விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|