மீன் விலை குறைவுமீன் விலை குறைவு ... தங்கம் விலை சிறிது உயர்வு தங்கம் விலை சிறிது உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஏ-ஸ்டார்! ஆட்டோ ட்ரான்ஸ்மிஷனில் சூப்பர் ஸ்டார்!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
12:05

மாருதி சுசூகி இந்திய இளைஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொண்டு வந்ததே மாருதி ஏ-ஸ்டார். மாருதி ஆல்டோவிற்கும் மாருதி ஸ்விஃப்ட்டிற்கும் இடைப்பட்ட ஏ-ஸ்டார் பற்றி பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. மிக நுட்பமான அபரிதமான செயல்திறனும் அதே நேரம் குறையற்ற ஸ்திரத்தன்மையும் இதன் வடிவமைப்பில் உள்ளது என்பதால் வாடிக்கையாளரின் முழுமையான திருப்தி கொண்ட கார் என்ற பெருமையை ஏ-ஸ்டார் அடைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அறிமுகமான இக்கார் 2009-2010 மற்றும் 2010-11 ஆண்டுக்கான வாடிக்கையாளர் திருப்தி பெற்ற சிறந்த கார் விருதை தட்டிச்சென்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே கார் ஆல்டோ ஈகோ என்ற பெயரில் உலகெங்கிலும் மிக வெற்றிகரமான அமோக விற்பனையை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
முதல்கார் , சிறியகார் வாங்க நினைப்பவர்கள் ஆல்டோவை வாங்கி விடுவர். சிறந்த செயல்திறனுடன் சற்றே பெரிய கார் வேண்டுபவர்கள் மாருதி ஸ்விஃப்டை வாங்கி விடுவர். அப்படியிருக்க இரண்டுக்கும் இடையிலான ஏ-ஸ்டார் ஏன் வாங்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் இக்காரில் உள்ள பிக்அப், மைலேஜ், ஆட்டோ டிரான்ஸ்மிஷன் என்ற பல அம்சங்கள் கொண்ட இக்கார் இளைஞர்களின் தேர்வாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஏ-ஸ்டாரின் சிறப்பான அம்சங்களைப்பற்றி சற்றே விரிவாக பார்ப்போம்.
இதில் உள்ளது ஓ சீரிஸ் என்ஜின் 998 சிசி திறனும் 6200 ஆர்பிஎம்மில் 68 ககு பவரையும் 3500 ஆர்பிஎம்மில் 90 NM டார்க்கையும் கொடுக்கவல்லது. இந்த என்ஜினின் சிறப்பம்சமே இது முழு வதும் அலுமினியத்தால் ஆனது என்பது. அலுமினியம் என்பதால் குறைந்த எடை கொண்டது. குறைவான சூட்டை உண்டாக்குவதால் (80டிகிரி செல்., மட்டுமே) நீண்ட தூர பிரயாணத்திலும் வண்டி சூடாவதில்லை. மேலும் இது துரு பிடிப்பதில்லை.
இந்தியாவிலேயே மிகக் குறைவான விலையுள்ள ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் வண்டி ஏ ஸ்டார்தான். ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் வண்டிகளில் அதிக மைலேஜ் கொடுப்பதும் இதுதான். கியர் மாற்றும் பிரச்னையோ, க்ளட்சோ இல்லாததால் பெண்களின் இனிய தேர்வாக ஏ ஸ்டார் அமைகிறது. நீண்ட பிரயாணம் மேற்கொள்ளும் பெண் தொழில் முனைவோர்கள் ஏ ஸ்டாரையே விரும்புகின்றனர். ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் மாடலில் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. 4 ஸ்பீட் கியர் பாக்ஸ் இதில் உள்ளது.
மானுவல் கியர் பாக்ஸ் வேரியன்ட்டில் 5 ஸ்பீட் கியர் உள்ளது. இதன் கேபிள் ஷஃப்டிங் கியர் பாக்ஸ் சத்தமோ அதிர்வோ இல்லாத கியர் ஷஃப்ட்டை அளிக்கிறது. இதன் என்ஜினில் 3 சிலிண்டரும், சிலிண்டருக்கு நான்கு வால்வுகளும் உள்ளன. இதில் 2 வால்வு இன்லெட்டாகவும் 2 வால்வு எக்ஸாஸ்ட்டாகவும் வேலை செய்கிறது. இதனால் என்ஜின் செயல்திறன் மிக சிறப்பாகவும், எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும், நல்ல பிக்அப் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இக்காரில் 170 MM உள்ளது. இந்த செக்மண்ட்டின் எந்த காரிலும் இதை காண முடியவில்லை. இதனால் மேடு பள்ளமிக்க சாலைகளிலும் பயமின்றி பயணிக்கலாம். பின்புற சீட்டை மடித்துவிட்டு பொருட்கள் வைக்க உபயோகித்துக் கொள்வது, ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்வது, வசதி கொண்ட இன்பில்ட் சிங்கிள் டின் கொண்ட ஆடியோ ப்ளேயர், சோலையில் ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடிய 2360 MM கொண்ட வீல் பேஸ் டூ டோன் டாஷ்போர்ட் போன்றவைகளும் இதில் குறைந்த டர்னிங் ரேடியஸ் 4.5 மீட்டர் இருப்பதும் மிகவும் கவர்ச்சியான கூடுதல் அம்சங்களாகும்.
மாருதி ஏ-ஸ்டார் லிமிடெட் எடிஷனில் (AKTIV) வெள்ளை மற்றும் சில்வர் நிறமும், க்ராபிக் டிசைனும் கவர்ச்சியான சீட்களும் கொண்டு வருகிறது. இதன் வெளிப்புற வடிவமைப்பு ஐரோப்பிய பொறியியல் தொழில்நுட்பமாகும். ஏ-ஸ்டாரில் ஏ என்பது ஏரோடைனமிக்கை குறிப்பிடக்கூடியது. இதனால் வண்டி காற்றை கிழித்துக் கொண்டு அனாயாசமாக செல்லக் கூடியதாய் இருக்கிறது. மேலும் இதன் பின்புற ஸ்பாய்லரும் வண்டியின் இவ்வடிவமைப்பிற்கு உதவுவதால் வேகமான பயணத்திற்கும் எரிபொருள் சிக்கனத்திற்கும் இது உதவுகிறது. மாருதியின் ஏஸ்டார் 7 மாடல்களிலும் (இதில் இரண்டு ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன்) 7 நிறங்களிலும் வருகிறது. 3 வருட வாரண்டி அல்லது 60000 கிலோமீட்டரில் 3 இலவச சர்வீஸ் உடன் கிடைக்கிறது. தற்போதைய ஏ-ஸ்டாருக்கான சிறப்பு சலுகையாக ரூபாய் 20000 ரொக்கத்தள்ளுபடியும் ரூபாய் 20000 எக்ஸ்சேஞ்ச் போனசும் (Exchange Bonus) மேலும் ரூபாய் 3000 கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
நிறைய சிறப்பு அம்சங்களுடன் நியாயமான விலையில் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மாருதி ”சூகியின் ஏ-ஸ்டார் உண்மையிலேயே எல்லோரையும் கவரும் ஸ்டார் என்றால் மிகையல்ல.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)