பதிவு செய்த நாள்
09 மார்2013
13:57
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், 4 வீல் டிரைவ் வசதி கொண்ட, எஸ்.யு.வி., பிரிவில் வரும், "கூர்க்கா' வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம், மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். "பாரத் ஸ்டேஜ் 3' என்ற, புகை மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, உருவாக்கப் பட்டுள்ளது. "ஸாஃப்ட் டாப்' மற்றும் "ஹார்டு டாப்' என, இரண்டு வகைகளில், இந்த வாகனம் கிடைக்கும். "ஸாஃப்ட் டாப்' வாகனம், 2 வீல் டிரைவ்(ரியர் டிரைவ்) மற்றும், 4 வீல் டிரைவ் என, இரண்டு வகைகளில் கிடைக்கும். "ஹார்டு டாப்' வாகனம், 4 வீல் டிரைவ் வசதியை மட்டும் கொண்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை, ரூ. 6.25 லட்சத்தில் துவங்கி, ரூ.8.50 லட்சம்( எக்ஸ்ஷோரூம், டில்லி) வரை உள்ளது. இந்த வாகனத்தில், 2.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது. "ஸாஃப்ட் டாப்' வாகனத்தில், ஒரே நேரத்தில், 6 பேரும், "ஹார்டு டாப்' வாகனத்தில், ஒரே நேரத்தில், 5 பேரும் பயணம் செய்ய முடியும். பவர் ஸ்டியரிங், "ஏஸி', 4 வீல் டிரைவ் வசதிக்கு மேனுவலாக மாற்றிக் கொள்ளும் வசதி, பனி விளக்குகள், 29.5 அங்குல வீல்கள் போன்ற வசதிகள், இந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|