பதிவு செய்த நாள்
14 மார்2013
17:16

மும்பை : கடந்த மூன்று தினங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் நான்காவது நாளில் நல்ல ஏற்றம் கண்டன. குறிப்பாக நேற்று 202 புள்ளிகள் சரிவில் இருந்த சென்செக்ஸ் இன்று 208 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 207.89 புள்ளிகள் உயர்ந்து 19,570.44 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 57.75 புள்ளிகள் உயர்ந்து 5,908.95 எனும் அளவிலும் முடிந்தன.
இன்று வெளியான பணவீக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு உண்பத்தி தொடர்பான பொருட்களில் விலை குறைந்ததாலும், அடுத்தவாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் அமெரிக்க, ஐரோப்பா பங்குசந்தைகள காணப்பட்ட ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக இன்றை வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., உள்ளிட்ட வங்கி நிறுவன பங்குகளும் நல்ல லாபமும், டிசிஎஸ்., ஓன்ஜிசி., உள்ளிட்ட பங்குகள் சிறிய லாபமும் அடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|