பதிவு செய்த நாள்
15 மார்2013
05:53

புதுடில்லி:இந்தியா முதன் முறையாக, சீனாவுக்கு, 13,700 டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்ய உள்ளது.இவை, அடுத்த மாதம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். சரக்கு போக்குவரத்து செலவு உட்பட, ஒரு டன் மக்காச்சோளம், 320 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படும் என, வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
சீனாவிற்கு ஓராண்டில், 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு, 70 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. இதில், உள்நாட்டிற்கான தேவை, 30 லட்சம் டன்னாக உள்ளது.மக்காச்சோளம் ஏற்றுமதியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, இரு தரப்பிலும் சுமுக தீர்வு காணப்படும். இதன் மூலம், வருங்காலத்தில் மேலும், பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என, அந்த வர்த்தகர் மேலும் தெரிவித்தார்..
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|