பதிவு செய்த நாள்
16 மார்2013
01:01

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, மிதமான அளவிலேயே உயர்ந்துள்ளது என, வருமான வரித் துறையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட்பேங்க் : கணக்கீட்டு காலாண்டில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இவ்வங்கி செலுத்திய முன்கூட்டிய வரி, 600 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கின் முன்கூட்டிய வரி, 25 சதவீதம் உயர்ந்து, 425 கோடியிலிருந்து, 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், நாட்டின் வங்கி துறையில், முதலிடத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செலுத்திய முன்கூட்டிய வரி, 1,650 கோடியிலிருந்து, 1,450 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.யெஸ் பேங்கின் முன்கூட்டிய வரி, 50 சதவீதம் அதிகரித்து, 110 கோடியிலிருந்து, 165 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அயல்நாட்டு வங்கியான, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்கின் முன்கூட்டிய வரி, 10 சதவீதம் உயர்ந்து, 435 கோடியிலிருந்து, 475 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
மோட்டார் வாகனம்:நாட்டின் மோட்டார் வாகன துறையில், சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 2 சதவீதம் மட்டும் உயர்ந்து, 293 கோடியிலிருந்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மகிந்திரா நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 178 கோடியிலிருந்து, 205 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிமென்ட் துறையைச் சேர்ந்த, ஏ.சி.சி., நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 50 சதவீதம் அதிகரித்து, 149 கோடியிலிருந்து, 227 கோடி ரூபாயாகவளர்ச்சி கண்டுள்ளது.தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டி.சி.எஸ்., நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 10 சதவீதம் உயர்ந்து, 545 கோடியிலிருந்து, 600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த அளவில், நடப்பு நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அயல்நாட்டு அலுவலகங்களுக்காக செலுத்திய முன்கூட்டிய வரி, 6,880 கோடி ரூபாயாக உள்ளது என, வருமான வரி துறையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபம்:நிறுவனங்கள், அவை ஈட்டும் லாபத்திற்கு ஏற்ப, ஒரு நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன. ஒரு நிறுவனம், எந்த அளவிற்கு முன்கூட்டிய வரியை செலுத்துகிறது என்பதிலிருந்து, அந்நிறுவனத்தின் லாபம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை, ஓரளவிற்கு முன்கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|