பதிவு செய்த நாள்
16 மார்2013
01:03

புதுடில்லி:வாடிக்கையாளரின் புகைப்படத்துடன் கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதை, பார்லிமென்டில், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:தொலைந்து போகும் அல்லது திருடப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் அதிக அளவில் மோசடிகள் நடைபெறுகின்றன. இதை கட்டுப்படுத்த, புகைப்படத்துடன் கூடிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வாடிக்கையாளர் கையொப்பமுடன், 'லேமினேட்' செய்யப்பட்ட கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும், வங்கிகள் ஆலோசிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|