பதிவு செய்த நாள்
16 மார்2013
01:07

சேலம்:மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு துவரம் பருப்பு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை, இரண்டே வாரத்தில் குவிண்டாலுக்கு, 900 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
கொள்முதல்:தமிழக அரசு ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், மார்ச் முதல் வாரத்தில், 7,000 டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்தது. இதனால்,பெரிய வியாபாரிகள் வைத்திருந்த சரக்கு இருப்பின் அளவு வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் வரை, தினம்தோறும் தமிழகத்துக்கு, 50 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த துவரம் பருப்பு, தற்போது, 20 லாரியாக குறைந்து ள்ளது.
அதே நேரத்தில், தமிழக வியாபாரிகளிடம், போதிய அளவு துவரம் பருப்பு இருப்பு இல்லாததால், வெளிச் சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளது.
இரு வாரங்களில் துவரம்பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 900 ரூபாய் வரையும், சில்லரை விலையில் கிலோவுக்கு, 11 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.பிப்ரவரி கடைசி வாரத்தில், 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு குவிண்டால், முதல் ரக துவரம் பருப்பு தற்போது, 7,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் ரகம், 6,300லிருந்து 7,200 ரூபாயாகவும், மூன்றாம் ரகம் 6,000லிருந்து, 6,900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக சில்லரை விலையில், ஒரு கிலோ முதல் ரக துவரம் பருப்பு விலை,66 ரூபாயில் இருந்து, 78 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு: இரண்டாம் ரகம் 60லிருந்து, 72 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 58லிருந்து, 68 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.தமிழக அரசு, பொதுவினியோக திட்டத்துக்கான பருப்பை, வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தால் மட்டுமே, துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த முடியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|