பதிவு செய்த நாள்
16 மார்2013
10:21

கார்களைப் பற்றி படிக்கையில் அல்லது பார்க்கையில் நமக்கு சில வார்த்தைகள் பரிச்சயமாக இருக்கும். MPFI அல்லது CRDI என்ஜின் போன்றவைகள் அதில் சில. ஆனால் அது எதை குறிக்கிறது அந்த என்ஜின் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமலே இருக்கலாம். இவ்வகையில் MPFI மல்டிபாயின்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் என்ற பெட்ரோல் என்ஜின் பற்றி இக்கட்டுரையில் காணலாம். இந்த என்ஜினை கட்டுப்படுத்த ஒரு சிறிய கம்ப்யூட்டர் முறை உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக பெட்ரோல் கார்களில் மூன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்கள் இருக்கும். ஒவ்வொரு சிலிண்டரிலும் ஒரு ப்யூவல் இன்ஜெக்டர் இருப்பதால் இது மல்டி பாயின்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுக்கு பவர் பெட்ரோலை காற்றுடன் சேர்த்து எரிப்பதிலிருந்து கிடைக்கிறது. பெட்ரோலுடன் காற்று கலக்கப்பட்டு கம்பஷன் சேம்பர் என்ற சிலிண்டரில் எரிக்கப்படுகிறது. பெட்ரோல் எரிக்கப்படுவதிலிருந்து கிடைக்கும் சக்தியைக்கொண்டு என்ஜின் இயங்குகிறது. இதில் முன்பெல்லாம் கார்பரேட்டர் தான் பெட்ரோலை காற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சிலிண்டருக்குள் அனுப்பும். இதில் கார்ப்பரேட்டர் பெட்ரோலையும் காற்றை கலக்கும் விகிதம் மாறுபடுவது, இதில் எங்காவது கசிவு ஏற்படுவது, ஒரே மாதிரி அளவு இல்லாமல் வேறுபடுவது போன்ற காரணங்களால் எரிபொருள் வீணாவதும் இதனால் காற்றில் மாசு அதிகரிப்பதும் நிகழும். ஆனால், இம்மாதிரி குறைபாடுகளெல்லாம் MPFI என்ஜினில் தவிர்க்கப்படுகிறது. இந்த என்ஜின்களில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் இருக்கும் ஒவ்வொரு ஃப்யூவல் இன்ஜெக்டரும் சரியான அளவு பெட்ரோலையே செலுத்தும். இதை கண்காணிக்க ஒவ்வொரு ஃப்யூவல் இன்ஜெக்டரிலும் ஒரு மைக்ரோ கண்ட்ரோலர் பொருத்தப்பட்டிருக்கும். மைக்ரோ கண்ட்ரோலரை காரின் கம்ப்யூட்டர் சிஸ்டம் கட்டுப்படுத்துகிறது. இக்கம்ப்யூட்டர் காரின் வேகம், என்ஜினின் தட்ப வெப்பம், ஆக்சிலரேஷன் எடை போன்று பல விஷயங்களை கணித்து அதற்கு தேவையான எரிபொருளையும். காற்றின் அளவையும் தீர்மானித்து அத்தகவலை மைக்ரோ கன்ட்ரோலருக்கு அனுப்ப, மைக்ரோ கன்ட்ரோலரின் தகவலுக்கு ஏற்ப ஃப்யூவல் இன்ஜெக்ஷன் செயல்படுத்தப்படுகிறது. இதனால் எரிபொருள் வீணாக்கப்படுவதில்லை. இதனால் எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி மாசுக்கட்டுப்பாடும் கிடைக்கிறது.
MPFI என்ஜினினால் ஏற்படும் மற்ற நன்மைகள் என்ஜின் க்ரானிக் குளிரான சீதோஷணங்களிலும் தேவைப்படுவதில்லை. ஆக்சிலரேஷன் கொடுப்பதற்கு ஏற்ப மிக சிறந்த செயல்திறனுடன் என்ஜின் இயங்குவது, போன்றவைகளாகும் தற்கால MPFI என்ஜின்களில் ஒரு மெமரி யூனிட்டும் பொருத்தப்படுகிறது. இது ஓட்டுனரின் தேவைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு அதை, "ஞாபகத்தில்' கொண்டு அந்த செட்டிங்கிற்கு ஏற்ப செயல்படும். இதனால் ஓட்டுனரின் வாகனம் ஓட்டும் செயல்முறையையும் கணிக்க முடியும். Mகஊஐ என்ஜின்களில் இரண்டு வகை உண்டு. "சீக்வென்ஷியல்' மற்றும் "சைமல்டேனியஸ்' என்று, நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் கார் மிகவும் வசதியாகவும் சிறப்பாகவும் மாறிக்கொண்டே வருகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|