பதிவு செய்த நாள்
16 மார்2013
15:40

ஏப்ரல் முதல் பென்ஸ் கார் விலை அதிகபட்சமாக ரூ.58 லட்சம் வரை உயருகிறது மெர்சிடிஸ் பென்ஸ். உற்பத்தி செலவீனம் அதிகரித்திருப்பதால் கார் விலையை உயர்த்த வேண்டியிருப்பதாக கார் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இது சாதாரண கார் தயாரிப்பாளர்களின் நிலை. ஆனால், சொகுசு கார் தயாரிப்பாளர்கள் இரண்டு பக்கமும் இடி நிலையில் இருக்கின்றன. உற்பத்தி செலவீனம் மற்றும் பட்ஜெட்டில் இறக்குமதி கார்களுக்கான வரியை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியிருப்பதால் பெரும் இக்கட்டில் இருக்கின்றன. இறக்குமதி கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டிருப்பதையடுத்து, இறக்குமதி கார்களின் விலையை அதிகபட்சம் ரூ.58 லட்சம் வரை உயர்த்த இருப்பதாக பென்ஸ் தெரிவித்துள்ளது. எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் விலைதான் தற்போது ரூ.58 லட்சம் வரை உயர இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் கார்களின் விலையை மாடலுக்கு தகுந்தவாறு ஒரு சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் இந்த விலை ஏற்ற்ம் நடைமுறைக்கு வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|