"கடன் வசூலில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்'"கடன் வசூலில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்' ... திருப்பூரில் மீண்டும் நூலிழை விலை உயர்வு திருப்பூரில் மீண்டும் நூலிழை விலை உயர்வு ...
ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.87 லட்சம் கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
23:53

புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 2.85 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், அமெரிக்க டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 10.31 சதவீதம் குறைந்து உள்ளது என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டாலர் மதிப்புகணக்கீட்டு காலத்தில், டாலர் மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாறுதல்ளால், டாலர் மதிப்பிலான, இவற்றின் ஏற்றுமதி மதிப்பில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1,87,340 கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டின், இதே காலத்தில், 1,82,142 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதி, 3,833 கோடி õலரிலிருந்து, 3,438 கோடி டாலராக குறைந்துள்ளது.உள்நாட்டில், தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம், இதன் உற்பத்தி, போதிய அளவிற்கு இல்லாததால், நம்நாடு அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.கச்சா எண்ணெய் நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக, தங்கம் உள்ளது. ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. எனவே, இறக்குமதியை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், தங்கம் இறக்குமதி மீது, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.சென்ற பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 81,959 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1,00,271 கோடி ரூபாய்) விட, 18.26 சதவீதம் குறைவாகும். டாலர் மதிப்பின் அடிப்படையிலும், இதன் ஏற்றுமதி, 28.87 சதவீதம் சரிவடைந்து, 2,120 கோடி டாலரிலிருந்து, 1,508 கோடி டாலராக குறைந்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும், இதன் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 39.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,093 கோடி ரூபாயிலிருந்து, 9,902 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 67.37 சதவீதம் வளர்ச்சி கண்டு, 38,651 கோடி ரூபாயிலிருந்து, 64,690 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலும், இவற்றின் ஏற்றுமதி, 46.34 சதவீதம் அதிகரித்து, 809 கோடி டாலரிலிருந்து, 1,182 கோடி டாலராக உயர்ந்துள்ளது.தங்க நாணயங்கள்கணக்கீட்டு காலத்தில், தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, ரூபாயின் மதிப்பு அடிப்படையில், 16.87 சதவீதம் சரிவடைந்து, 30,731 கோடி ரூபாயிலிருந்து, 25,546 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 27.16 சதவீதம் சரிவடைந்து, 644 கோடி டாலரில் இருந்து, 469 கோடி டாலராக குறைந்துள்ளது.இதே காலத்தில், நவரத்தினங்கள் ஏற்றுமதி, 121 சதவீதம் உயர்ந்து, 1,474 கோடி ரூபாயிலிருந்து, 3,255 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு அடிப்படையிலும், இவற்றின் ஏற்றுமதி, 95.45 சதவீதம் வளர்ச்சி கண்டு, 31 கோடி டாலரிலிருந்து, 60 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 25.39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,111 கோடி ரூபாயிலிருந்து, 3,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கச்சா வைரம்

கணக்கீட்டு காலத்தில், நாட்டின் கச்சா வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 1.97 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,360 கோடி ரூபாயிலிருந்து, 7,505 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 10.61 சதவீதம் குறைந்து, 154 கோடி டாலரிலிருந்து, 138 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. கணக்கீட்டு காலத்தில், கச்சா வைரம் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 2.94 சதவீதம் வளர்ச்சி கண்டு, 300 லட்சம் காரட்டிலிருந்து, 309 லட்சம் காரட்டாக உயர்ந்துள்ளது.இவை தவிர, முத்துக்கள், செயற்கை கற்கள் உள்ளிட்ட இதர ஆபரணங்கள் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)