பதிவு செய்த நாள்
18 மார்2013
23:56

திருப்பூர்: அதிகரிக்கும் பருத்தி விலை, மின்வெட்டு ஆகியவற்றால், எவ்வித அறிவிப்பும் இன்றி, திருப்பூரில் உள்ள சில நூற்பாலைகள், நூலிழை விலையை மீண்டும் கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்த்தியுள்ளன.குஜராத், ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகளவு பருத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, பருத்தி விலை அதிகரித்துள்ளது. இதனால், கேண்டி (356 கிலோ) 34,500 ரூபாயாக இருந்த பருத்தியின் விலை, தற்போது 42,500 ரூபாயாக அதிகரித்துள்ளது.நூற்பாலைகள்
பருத்தி விலை உயர்வால், திருப்பூரில் உள்ள சில நூற்பாலைகள், கடந்த 1ம் தேதி, நூலிழை விலையை கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்த்தின.
இந்நிலையில், 191 ரூபாயாக இருந்த 20ம் நம்பர் நூல், 196 ரூபாய்; 199 ரூபாயாக இருந்த 24ம் நம்பர் நூல், 204; 211 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் நூல், 216; 226 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் நூல், 231; 234 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் நூல், 239 ரூபாய் என, நூல் விலை உயர்த்தப்பட்டது.இந்நிலையில், திருப்பூரில் உள்ள சில நூற்பாலைகள், எவ்வித அறிவிப்பும் இன்றி, நூலிழை விலையை மீண்டும் கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்த்திஉள்ளன.20ம் நம்பர் நூல் 201 ரூபாய்; 24ம் நம்பர் நூல் 209; 30ம் நம்பர் நூல் 221; 34ம் நம்பர் நூல் 236; 40ம் நம்பர் நூல் 244 ரூபாய் என, விலையை மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்கின்றன.நூலிழை வியாபாரிகள் கூறியதாவது:பருத்தி விலை உயர்வை காரணம் காட்டி, திருப்பூரில் உள்ள சில நூற்பாலைகள், கடந்த 1ம் தேதி நூலிழை விலையை கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்த்தின.
பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மின்வெட்டு நேரமும் உயர்ந்து உள்ளது. மூலப்பொருட்கள்இதனால், நூற்பாலைகளில் ஜெனரேட்டர் இயக்கம் அதிகரித்துள்ளது; மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், நூலிழை உற்பத்தி செலவு அதிகரிப்பால், தற்போது எவ்வித அறிவிப்பும் இன்றி, மீண்டும் நூலிழை விலையை கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்த்திஉள்ளன.நூலிழை விலையை உயர்த்தாத நூற்பாலைகள், விலையை ஒரேயடியாக உயர்த்தி விடலாம் என்ற நோக்கில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றன. விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக, நூலிழை விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|