பதிவு செய்த நாள்
19 மார்2013
09:13

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.77 புள்ளிகள் அதிகரித்து 19279.43 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் அதிகரித்து 5850.95 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான நேற்று சுணக்கமாகவே இருந்தது. ரிசர்வ் வங்கி, இன்று அதன் நிதி ஆய்வுக் கொள்கையை வெளியிட உள்ளது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.மேலும், சர்வதேச நிலவரங்களால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. இருப்பினும், நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|