பதிவு செய்த நாள்
19 மார்2013
12:23

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.மு., கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகியதன் எதிரொளியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செகஸ் குறியீட்டு எண் 201.13 புள்ளிகள் சரிந்து 19092.07 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 64.90 புள்ளிகள் சரிந்து 5770.35 புள்ளிகளோடும் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.77 புள்ளிகள் அதிகரித்து 19279.43 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் அதிகரித்து 5850.95 புள்ளிகளோடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|