பதிவு செய்த நாள்
20 மார்2013
00:40

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ஈரான் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்
படும் கச்சா எண்ணெய் இறக்குமதி, 27 சதவீதம் குறைந்து, 1.30 கோடி டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார தடை:இதனை எடுத்துக் காட்டும் விதமாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான, 9 மாத காலத்தில், ஈரானிலிருந்து, 97 லட்சம் டன் அளவிற்கே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.சென்ற 2011 - 12ம் நிதியாண்டில், இந்தியா, ஈரானிலிருந்து மிக அதிக அளவாக, 1.81 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பு திட்டங்களை கைவிடக் கோரி, ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. மேலும், ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளின் பட்டியலில், ஈரான், நான்காவது இடத்திலிருந்து, ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.கடந்த 2010 - 11ம் நிதியாண்டில், இந்தியாவிற்கு அதிகளவு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில், சவுதி அரேபியாவிற்கு (2.48 கோடி டன்) அடுத்தபடியாக, ஈரான் (1.72 கோடி டன்) இரண்டாம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்:இந்நாடுகள் தவிர, வெனிசுலா (1.52 கோடி டன்), குவைத் (1.32 கோடி டன்) மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் (1.14 கோடி டன்) ஆகிய நாடுகளும், இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளன.சென்ற 2011 - 12ம் நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், ஈரானின் பங்களிப்பு, 10.5 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 7.2 சதவீதமாகக் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான காலத்தில், நம் நாடு ஒட்டு மொத்த அளவில், 13.40 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொண்டுள்ளது.
தேவை:சென்ற 2011 - 12ம் நிதியாண்டில், நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, 17.17 கோடி டன்னாகவும், 2010 - 11ம் நிதியாண்டில், 16.34 கோடி டன்னாகவும், 2009 - 10ம் நிதியாண்டில், 15.92 கோடி டன்னாகவும் இருந்தது.நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 79 சதவீதம், இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளின் பட்டியலில், ஈரான், நான்காவது இடத்தில்இருந்து, ஏழாவது இடத்திற்கு சென்றது
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|