பதிவு செய்த நாள்
20 மார்2013
00:47

புதுடில்லி:நடப்பு 2012-13ம் ஆண்டு, சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,- செப்.,) சர்க்கரை உற்பத்தி, மதிப்பீட்டை விட, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காலம் கடந்த பருவமழை, வறட்சி போன்றவற்றால், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, நாட்டின் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி, குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், 2.46 கோடி டன்னாக குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், சென்ற அக்டோபர் முதல் நடப்பு மார்ச் 15ம் தேதி வரையிலான காலத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.10 கோடி டன்னாக உள்ளது என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|