பதிவு செய்த நாள்
20 மார்2013
00:52

புதுடில்லி:நடப்பாண்டில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.09 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை காட்டிலும், 7 சதவீதம் அதிகமாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
உலகளவில், சமையல் எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்வதில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற, 2011-12ம் பருவத்தில்(நவம்பர் - அக்டோபர்), நம்நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.01 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இதில், பாமாயிலின் பங்களிப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடப்புஆண்டில் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.09 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த பருவத்தை காட்டிலும், நடப்பு, 2012-13ம் பருவத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 5 - 7 லட்சம் டன் கூடுதலாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து, ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 1.07 - 1.09 டன் என்ற அளவில் இருக்கும் என, எஸ்.இ.ஏ.,தெரிவித்து உள்ளது.
நடப்பாண்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 2.60 கோடி டன்னிலிருந்து, 2.56 கோடி டன்னாக சற்று குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும், உள்நாட்டில் தாவர எண்ணெய் உற்பத்தி, 81.90 லட்சம் டன்னாக சற்று உயரும் என, எதிர்பார்க்கப்படுவதாக, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|