பதிவு செய்த நாள்
20 மார்2013
01:01

மும்பை:மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 3,004 கோடி ரூபாய் மூலதனம் மேற்கொண்டுள்ளது.பொதுத் துறை வங்கிகள், "பேசல்-3' விதிமுறையின் கீழ், அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை, வரும் ஏப்ரல் முதல் பராமரிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதன்படி, பொதுத் துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு, மத்திய அரசு, 3,004 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில், பங்கு ஒன்று, 2,312.78 ரூபாய் என்ற வீதத்தில், 1.29 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம், 61.58 சதவீதத்தில் இருந்து, 62.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|