பதிவு செய்த நாள்
20 மார்2013
10:42
அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு கார் நிறுவனம், இந்தியாவில், 2010ம் ஆண்டு மார்ச் மாதம், பிகோ காரை அறிமுகப்படுத்தியது. இதுவரை, 2.7 லட்சம் பிகோ கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார், 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிகோ கார், அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளதை கொண்டாடும் வகையில், பிகோ காரின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும், இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் காரின் விலை ரூ.4.15 லட்சத்திலும், டீசல் காரின் விலை ரூ.5.15 லட்சத்திலும் (எக்ஸ்ஷோரூம், டில்லி) துவங்குகிறது. ஸ்பெஷல் எடிஷன் காரில், சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம், சென்சார்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ரியர் ஸ்பாய்லர், லிமிடெட் எடிஷன் சீட் கவர்கள் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. "டைமண்ட் வொய்ட்' என்ற ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், டீசல் காரில், 1.4 லிட்டர் டீசல் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|