கோடை காலத்தில் காரை பாதுகாப்பது எப்படி?கோடை காலத்தில் காரை பாதுகாப்பது எப்படி? ... சென்செக்ஸ் 123 புள்ளிகள் ‌சரிவில் முடிந்தது சென்செக்ஸ் 123 புள்ளிகள் ‌சரிவில் முடிந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமஹா மோட்டார் பைக்குகள் வெற்றிக்கு பின்னே இருப்பது யமஹா தொழில்நுட்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
15:14

இந்தியாவிற்குள் 1985ஆம் ஆண்டு நுழைந்த ஜப்பானின் யமஹா நிறுவனம் 1996ஆம் ஆண்டு இந்திய எஸ்கார்ட்ஸ் குழுமத்துடன் 50-50 கூட்டு வைத்துக் கொண்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு 100% பங்குகளைப் பெற்று இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமாக வளர்ந்து தரமான உறுதியான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து இந்திய இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொள்ள தொடங்கியது. யமஹாவின் 1679 சிசி திறன் கொண்ட VMAX 998 சிசி திறன் கொண்ட YZFR1 மற்றும் FZI 153 சிசி திறன் கொண்ட YZFR15 பேசர் FZS, FZ16, SZR, SZ, SZX போன்றவைகளும், 123 சிசி திறன் கொண்ட SS125, YBR125, 106 முதல் 113 சிசி கொண்ட YBR 110 க்ரக்ஸ் மற்றும் யமஹா ரே போன்றவைகள் இந்நிறுவன பைக்குகளாகும். இவ்வாகனங்களின் வெற்றிக்கு காரணமாக யமஹாவின் சிறப்பான தொழில்நுட்பங்கள் காரணம் எனலாம். அவற்றைப் பற்றி பின்வருமாறு,
யமஹா தொழில்நுட்பத்தின் சிறப்புகள்
யமஹா மோட்டார் பைக்குகளின் பல தொழில்நுட்ப அம்சங்களும், வடிவமைப்புகளும் தரத்திலும் செயல்திறனிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத இந்நிறுவனத்தின் கொள்கையையே காட்டுகிறது. அச்சிறப்பு அம்சங்களில் ஒரு சில குறைந்த சிசி திறன் கொண்ட மாடல்களிலும் ஒரு சில அதிக சிசி திறன் கொண்ட மாடல்களிலும் காணப்படுகின்றன.
லிக்விட் கூலிங் சிஸ்டம்
இம்முறையில் அதிக செயல்திறன் கொண்ட என்ஜினின் அதிகரிக்கப்படும் சூட்டை தணிக்க லிக்விட் கூலண்ட் என்ற திரவம் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் அதிக வேகப் பயணத்திலும், போக்குவரத்து நெரிசலிலும், மலையேற்றங்களிலும் ஒரே சீரான என்ஜின் செயல்பாட்டை வழங்குகிறது. உதாரணமாக YZFR15 மாடலில் இத்தொழில் நுட்பத்தை காணலாம்.
4 வால்வு என்ஜின்
பொதுவாக என்ஜின்களில் காற்றும் எரிபொருளும் கலந்த கலவையை உட்செலுத்த 1 வால்வும், எரித்த கலவை வெளியேற்ற 1 வால்வும் செயல்படும் (2 வால்வு என்ஜின்) ஆனால் யமஹாவின் சில மாடல்களில் 2 இன்டேக் வால்வுகளும் 2 எக்ஸாஸ்ட் வால்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகளவு காற்று எரிபொருள் கலவை என்ஜினுக்கு செல்லவும் வெளியேற்றப்படவும் முடிவதால் என்ஜின் செயல்திறன் அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு யமஹா ZRM1 MOTO GP மற்றும் YZFR15 மாடல்களைக் கூறலாம்.
லேசான என்ஜின் பிஸ்டன்
‌போர்ஜ்ட் பிஸ்டன் என்றழைக்கப்படும் எடைகுறைவான பிஸ்டன் பொருத்தப்படுவதால் துரிதமாக செயல்படவேண்டிய பிஸ்டன் சுலபமாகவும் விரைவாகவும் செயல்பட முடிகிறது. வார்ப்பு பிஸ்டனை விட இது 20% எடை குறைவாக இருப்பதால் என்ஜின் சத்தம் குறைவாகவும், அதிர்ச்சி குறைவாகவும், மென்மையாகவும் இயங்குகிறது. மேலும் இது அதிக சூடாகும் என்ஜின்களுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கிறது. யமஹா மாடலில் இத்தொழில் நுட்பத்தை காண முடிகிறது.
அதிர்வற்ற சுகமான பயணம்
சிங்கிள்-ஆக்சிஸ் பாலன்சர் என்ஜினின் அதிர்வை பெருமளவில் குறைக்கிறது. இதனால் பின்புறம் அமர்ந்திருப்பவக்கும், ஓட்டுபவரின் இருக்கை மற்றும் ஹேண்டில்பார், புட்ரெஸ்ட்களில் ஏற்படும் அதிர்வுகளும் குறைக்கப்பட்டு ஓட்டுனருக்கும் சுகமான பயணம் அமைகிறது. மேலும் என்ஜின் ப்ரேமில் ரப்பர் மௌண்ட் இல்லாமல் பொருத்தப்படுவதாலும் என்ஜின் அதிர்வு குறைகிறது. யமஹா FZ16 மற்றும் யமஹா YZFR15 இரண்டு மாடல்களிலும் இத்தொழில்நுட்பத்தை காணமுடிகிறது.
ரோலர் ராக்கர் ஆர்ம்
சொகுசுக்கார் என்ஜின்களில் காணப்படும் ரோலர் ராக்கர் ஆர்ம் யமஹா YZFR15 மற்றும் FZ16 என்ஜின்களில் அதற்கேற்ற வடிவமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. பால் பேரிங்கிற்கு பதில் இருக்கும் இந்த ரோலர் பேரிங் என்ஜின் செயல்திறனை மேம்படுத்தி ஹார்ஸ்பவர் வீணாவதைத் தடுத்து குறைந்த மற்றும் மிதமான வேகத்தில் ஸ்திரத்தன்மையையும் வழங்கி மாசுக்கட்டுப்பாட்டையும் குறைக்கிறது.
ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்
கார்பரேட்டர் மூலம் காற்றையும் எரிபொருளையும் கலந்து சிலிண்டருக்குள் அனுப்பப்படும் முந்தைய தொழில்நுட்பம் தற்போது மாறிக்கொண்டே வருகிறது. MPFI, CRDI என்று கார்களில் என்ஜின்கள் மேம்படுத்தப்பட்டதை போல் யமஹா மோட்டார் பைக்குகளிலும் ப்யூவல் இன்ஜெக்டர் மூலம் மிகமிக மெல்லிய அதே நேரம் அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பீய்ச்சியடிக்கப்படுகிறது. என்ஜினின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் ஸ்ப்ரே செய்யப்படுவதால் எரிபொருள் வீணாவது தடுக்கப்பட்டு, நல்ல மை‌‌லேஜும் சிறந்த நீடித்த செயல்திறனும் கிடைக்கிறது.
மிட்ஷிப் மப்ளர்
அதிக எடைகொண்ட பைக் மப்ளரை வண்டியின் நடுவில் பொருத்தப்படுவதால் புவியீர்ப்பு விசைக்கு இணக்கமாக வண்டியின் எடையை பேலன்ஸ் செய்ய உதவுகிறது. இதனால் வண்டியை கையாள்வதற்கும் அதிக டார்க் கொடுப்பதற்கும் ஏதுவாகிறது.
ரேடியல் டயர்
ரேடியல் டயர் கொண்ட இந்தியாவிலேயே முதல் மோட்டார் சைக்கிள் யமஹா FZ16 பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல அகலமான எடைக்குறைவான டயராக இருப்பதால் சாலையில் ஸ்திரத்தன்மையையும் அ‌தே நேரம் கையாள சுலபமாகவும் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப அம்சங்களைத் தவிர யமஹா FZ16 இல் உள்ள மோனோ க்ராஸ் சஸ்பென்ஷன் நீண்ட குஷன் ஸ்ட்ரோக் கொண்டு சுகமான பயணத்தை வழங்குகிறது. மேலும் இதன் முன்புற சஸ்பென்ஷன் 41 மிமி விட்டம் கொண்ட அகலமான உட்புற ட்யூப் என்பதால் சொகுசான அதிர்வற்ற பயணத்தை வழங்குகிறது.
வெளிப்புற வடிவமைப்பு
வண்டியின் வடிவமைப்பு காற்றை கிழித்துக் கொண்டு வண்டி ‌செல்கையில் காற்றின் விசையை வண்டி உபயோகித்துக் கொள்ளும் விதமாக அதன் வடிவமைப்பு இருக்க வேண்டும் ‘R’ சீரிஸ் பைக்குகளின் வடிவமைப்பில் இச்சிறப்பை காணமுடியும். YZFR1 மற்றும் YZFR6 ஆகிய மாடல்களில் உள்ள முன்புற மாஸ்க் காற்றை கிழித்துச் செல்ல உதவுவதுபோல், பின்னே செல்லும் காற்றை வெளிச் செலுத்தும்படி அமைக்கப்படும், பின்புற வடிவமைப்பும் சேர்ந்து சிறப்பாக இயங்குகிறது. இது வண்டியின்
ரேடியேட்டர் செயல்திறனையும் அதிகரிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)