பதிவு செய்த நாள்
23 மார்2013
02:42

யு.எஸ்.ஏ.விலுள்ள தெற்காசியர்களுக்காக முதல்முறையாக யூப்டிவி ஒரு சிறிய அளவிலனா மற்றும் கச்சிதமான ஸ்மார்ட் டி.வி.டாங்கிகளைஅறிமுகம் செய்துள்ளது.
அட்லாண்டா: உலகின் மிகப்பெரிய இணைய தொலைக்காட்சி வழங்குனரான யூப்டிவி .யு.எஸ்.ஏ.விலுள்ள தெற்காசிய வாடிக்கையாளர்களுக்கான முதல் யூப்டிவிடாங்கிளை அறிமுகம் செய்து இன்று அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் உள்ளடங்கங்களை பெற விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான புரட்சிகரமான சாதனம் யூப்டிவிடாங்கிள் ஆகும் சிறிய அளவில் 1080-பி திறனுடன் , வைஃபை பிளேயராக இது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விருப்பமான தொலைக்காட்சிகளை நேரடியாக பார்த்தல், வீடியோ ஆன் டிமான்டு,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அத்தியாயங்கள், பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் பரந்துபட்ட பிராந்திய திரைப்படங்களை கண்டுகளிப்பதை ஏதுவாக்குகிறது.
இந்த டாங்கிகளை தொலைக்காட்சியின் எச்.டி.எம்.ஐ. போர்டில் இணைக்கலாம். இந்த வசதி ஒரு சாதாரண தொலைக்காட்சியை ஸ்மார்ட் தொலைக்காட்சியாக மாறறுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அவரது தொலைக்காட்சியில் பரந்துபட்ட உள்ளடங்கங்களை காணலாம். யூப்டிவி டாங்கிள் வழியாக, பயணர்கள் 15--க்கும் மேற்பட்ட இந்திய தொலைக்காட்சி சேனல்களை நேரடியாக காணலாம். அல்லது ஹிந்தி ,தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒடிசா, குஜராத்தி, போஜ்புரி, ஆகிய 11 இந்திய மொழிகளில் வி.ஓ.டி.முறையில் காணலாம்.
யூப்டிவி ஒருகூட்டு சலுகையாக யு.எஸ்.ஏ.வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் ,ஆறு மாதங்கள் மற்றம் வருடாந்திர சந்தா பேக்கேஜ்களுக்கு சாதன கட்டணம் கிடையாது. இத்தகைய வசதிகளை பெறவதற்காக ஸ்மார்ட் தொலைக்காட்சி வாங்குவதுடன் ஒப்பிடுகையில், இதன் செலவீனம் மிகவும் குறைவாகும்.
இந்த டாங்கிளின் சிறப்பம்சங்களில் ஒன்ற அதன் எளிதாக எங்கும் கொண்டு செல்லும் தன்மையாகும். பயணர்களால்இதை கொண்டு வீடியோ பார்த்தல், இசை கேட்டல், சமீபத்திய செய்திகளை பெறுதல், அல்லது சமீபத்திய ஃபேஸ்புக், ஃபீட்ஸ்களை வீட்டிலேயே அவர்களது பெரிய திரை தொலைக்காட்சியில் பெறுதல் ஆகியவகைளை மேற்கொள்ள முடியும். மேலும் உள்ளடங்கங்களை டாங்கிளை கொண்டு செல்வதன் வழியாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். மற்றும் அதை அவர்களது பணியிடத்திலோ, அல்லது ஹோட்டலிலோ உள்ள எந்த ஒரு தொலைக்காட்சியிலும் பொருத்தி பார்த்து மகிழலாம். மேலும், வீடியோக்கள்,புகைப்படங்கள் அல்லது, இசை கோப்புகளை தொலைகாட்சி திரையில் பகிர்வதற்காக இந்த டாங்கில் ஒரு மெமரி கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது.
தங்கள் தொலைக்காட்சியில் இணையத்தை அணுக விரும்புவர்களுக்கு ஸ்மார்ட் தொலைக்காட்சி வழங்கத்தக்க வகையிலான அணுகுவசதியை வழங்கும் யூப்டிவி டாங்கிள் அதிலேயே மின்னஞ்சல்களை சோதித்தல் மற்றும் இணையத்தில் உலாவுதல் போன்றவைகளையும் மேற்கொள்வதை சாத்தியமாக்குகிறது. இந்த ஒரு சிறிய டாங்கிளைக் கொண்டு பயணர்கள் ஃபேஸ்புக், மற்றும் டிவீட்டரை அணுகலாம்.
புத்தாக்கம் மற்றும் அணுகத்தக்க உள்ளடக்கத்தினை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டினை உறுதி செய்யும் வகையில், யூப்டிவி அதன் பயணர்களுக்கு இந்த இரண்டாவது திரை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளடக்கத்தினை போன்/ டேப்ளட்களில் பெறுவதையும் மற்றும் அதை அவர்களது தொலைகாட்சி திரையில் ஃவை-பை வழியாக பகிர்வதையும் இது சாத்தியமாக்குகிறது. வரவிருக்கும் மேம்பாடுகளும், வாடிக்கையாளர்கள் அவர்களது பழைய ஆடியோ சிஸ்டம்களாக மாற்றுவதை இந்த டாங்கிளின் வழியாக சாத்தியமாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இசை, புகைப்படங்கள்,மற்றும்வீடியோக்களை ஆன்ட்ராய்டு போன்/ டேப்ளட்டுகள்அல்லது ஐபோன்/ ஐபேட்-ன் லெகசி ஆடியோ/வீடியோ ரிசீவர் பயன்படுத்தி கண்டுமகிழலாம்.
தொலைக்காட்சி டாங்கிள் அறிமுகத்தினை அறிவித்து பேசிய யூப்டிவி.-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் உதய் ரெட்டி, தொழில்நுட்பப் பிரிவில் முன்னோடித்துவ நிலையில் இருப்பதை யூப்டிவியில் உள்ளதை நாங்கள் நம்புகிறோம். இத்தயாரிப்பு யு.எஸ். முழுவதும் தொலைகாட்சி பார்க்கப் படும் வழியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியத்திறனை கொண்டுள்ளது. யபன்படுத்த மிகவும் சுலபமான யூப்டிவி டாங்கிள் ஒரு சாதாரண தொலை காட்சியை ஸ்மார்ட் தொலைகாட்சியாக மாற்றுகிறது. இந்த டாங்கிளை அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்தலாம். இளைய தலைமுறையினால் இசை கேட்வோ, அல்லது ஃபேஸ்புக் மற்றும் டுவீட்டர் போன்ற நவீன காலத்து வசதிகளை பெறவும், குடும்பத்திலுள்ள மூத்தவர்களால் இணையதளங்களை பார்வையிடுதல், அல்லது செய்தி, பொழுபோக்கு மற்றும்பக்தி சேனல்களுக்காக யூப்டிவியை பார்த்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் இது பயன்படும். வெகுவிரைவி்ல நாங்கள் இரண்டாம் திரை அனுபவத்துடன் அறிமுகப்படுத்தவுள்ள எதிர்கால மேம்பாடுகள் , தொலைகாட்சியை பார்வையிடும் முறையையே முற்றிலுமாக மாற்றக்கூடும் என்றுகூறினார்.
யு.எஸ்.ஏ.வின் முக்கியமானதொரு தெற்காசிய தொலைகாட்சி சேவை வழங்குனருடன் பிரத்தியகே கூட்டாண்மை மேற்கொள்ளும் வர்த்தக ரீதியிலான
முடிவைத் தொடர்ந்து யூப்டிவி இச்சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா, பிரிட்டன், ஐரோப்பா ,கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற சந்தைகளை கூர்நோக்கமாக கொண்டு யூப்டிவி டாங்கிள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
குளோபல் டேக் ஆஃப் இன்க் குறித்து ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், எஸ்டிபி.,கள், ஸ்மார்ட் ப்ளுரே பிளேயர்கள் , கணிணி/மேக்,ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, நோக்கியா, விண்டோஸ், 7 மொபைல், பிளாக்பெர்ரி, ஃபேஸ்புக் போன்ற பல்வேறு திரைகளின் வழியாக 120-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்கள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட வீடியோக்களை தினமும் வழங்கும் உலகி்ன் மிகப்பெரிய ஓடிடி அடித்தளம் குளோபல் டேக் ஆஃப் ஆகும். குறைவான செலவீனம்கொண்ட நம்பத்தக்க மற்றும் அளவிடத்தக்க அடித்தளமான இரு உலகளாவிய ஒளிபரப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க வழங்குவோர்களுக்காக ஒரு முழுமையாக நிர்வகிக்கப்பட்ட சேவையை அளிக்கிறது. பல்வேறு இணையம் ஏதுவாக்கப்பட்ட சாதனங்கள் வழியாக இணையத்தி்ல் உள்ளடக்கங்களை சந்தையாக்கல் செய்யும் நேரத்தையும் மற்றும் அதனால் உண்டாக்கும் சிக்கல்களையும் குறைக்க குளோபல் டேக்ஆஃப் உதவுகிறது. கன்வெர்ஜ்டு டிஜிட்டல் மற்றும் விளம்பர தீர்வுகளை உலகளாவிய அளவில் வழங்குவதில் முன்னணியில் வீற்றிருக்கும் நிறுவனம் குளோபல் டேக்ஆஃப் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் இல்ல சூழல் நிறுவனங்களுக்கு அதிகபட்ச உலகளாவிய அடைதல்கள் மற்றும் உள்ளடக்கங்கள் வழங்குவோருக்கு அவர்களது உள்ளடக்கங்கள் சுலபமாகவும் மற்றும் சிக்கனமாகவும் வழங்குவதற்கு ஏதுவான அடித்தளங்கள் மற்றும் சேவைகளை இந்நிறுவன தயாரிப்புகள் அளிக்கின்றன. உலகம் முழுவதும் மில்லியனுக்கும் மேற்பட்ட இணையம் ஏதுவாக்கப்பட்ட சாதனங்களில் இந்நிறுவனம் நேரடி தொலைக்காட்சி மற்றும் வீடியோ ஆன்-டிமாண்டு சேவைகளை வழங்கி வருகிறது. குளோபல் டேக்ஆஃப் நிறுவனத்தின் முக்கிய சேவையான யூப் டிவி, இந்திய நிகழ்ச்சிக்கான உலகின் போர்டலாகத் திகழ்வதுடன், பிரதி சந்தாதாரருக்கான உள்ளடக்க அளவினை தொழில் துறையிலேயே உச்சபட்சமாக கொண்டுள்து. 2006-ம் ஆண்டு நிறுவப்பட்ட குளோபல் டேக் ஆஃப் ஜியார்ஜியாவின் அட்லாண்டாவில் அதன் தலைமையகத்தையும் மற்றும் இந்தியாவில் அலுவலகங்களையும் கொண்டு்ள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு பார்க்கவும் மேலும் கூடுதல் தகவல்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்: ww.globaltakeoff.com.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|