பதிவு செய்த நாள்
24 மார்2013
00:37

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 196 கோடி டாலர் (10,780 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,231 கோடி டாலராக (16.07 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இது, இதற்கு முந்தைய, 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 22 கோடி டாலர் (1,210 கோடி ரூபாய்) குறைந்து, 29,035 கோடி டாலராக (15.98 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, சரிவை கண்டு வந்த நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் உயர்வை கண்டுள்ளது.கணக்கீட்டு வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 197 கோடி டாலர் (10,835 கோடி ரூபாய்) உயர்ந்து, 25,935 கோடி டாலராக (14.26 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|