பதிவு செய்த நாள்
24 மார்2013
00:38

நியூயார்க்:உலகளவில், சினிமா டிக்கெட் விற்பனை, 6 சதவீதம் உயர்ந்து, 3,470 கோடி டாலராக (1.90 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, மோஷன் பிக்சர்ஸ் அசோஷியேஷன் ஆப் அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டில், 3,260 கோடி டாலராக (1.79 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. உலகளவில், திரை அரங்குகளில் சினிமா பார்ப்பதில், அமெரிக்கர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதையடுத்து, சீனர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.கடந்த 2012ம் ஆண்டில், சீனாவில், திரை அரங்குகளில் சினிமா பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை, 36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 270 கோடி டாலராக (14,850 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான் நாடு (240 கோடி டாலர்/13,200 கோடி ரூபாய்) உள்ளது என, இந்த அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|