உற்பத்தி உயர்ந்துள்ள நிலையிலும்கொய்மலர் விலை வீழ்ச்சிஉற்பத்தி உயர்ந்துள்ள நிலையிலும்கொய்மலர் விலை வீழ்ச்சி ... வங்கிகளுக்கு விடுமுறை இல்லை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை ...
உலகளவில் உபரி உற்பத்தியால்... அலுமினியம் விலை மீண்டும் உயர வாய்ப்பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2013
00:43

புதுடில்லி:இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அலுமினியம் உற்பத்தி, தேவையை விட, பல மடங்கு அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் அதன் விலை உயர வாய்ப்பில்லை என, தெரியவந்துள்ளது.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், தொழில்துறை வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வாகன துறையின் வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளது.
அமெரிக்கா:இந்நிலையில், உலக நாடுகளின் அலுமினியம் உற்பத்தி அதிகரித்து உள்ளதால், அதன் விலை, கடந்த ஐந்தாண்டுகளாகவே குறைந்து வருகிறது.எடுத்துக்காட்டாக, கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலையின் துவக்கத்தில், நவம்பர் மாதம்,
சர்வதேச சந்தையில், ஒரு டன் அலுமினியம் விலை, 3,271 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.இது, 2009ம் ஆண்டு, பிப்ரவரியில், முந்தைய ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 1,252 டாலராக வீழ்ச்சி கண்டது. அதாவது, மூன்றே மாதங்களில், அலுமினியம் விலை, 60 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டது.அடுத்து வந்த ஆண்டுகளில், அலுமினியம் விலை, சற்று ஏற்றம் கண்டபோதிலும், கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, அதன் விலை, 32 சதவீதம் சரிவடைந்துள்ளது.நடப்பு 2013ம் ஆண்டில், லண்டன் உலோக சந்தையில், அலுமினியம் விலை, 9 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது, ஒரு டன் அலுமினியம், 1,895 டாலர் என்ற அளவில் உள்ளது.
உற்பத்தி திறன்:அலுமினியம் விலை சரிவை கட்டுப்படுத்தும் நோக்கில், பல நிறுவனங்கள் அதன் உற்பத்தியை குறைத்துள்ளன. சர்வதேச நாடுகளின் அலுமினியம் உற்பத்தி திறன், 5.7 கோடி டன்னாக உள்ளது. நடப்பாண்டில், அலுமினியம் தயாரிப்பு நிறுவனங்கள், 84 சதவீத உற்பத்தி திறனில் இயங்க முடிவு செய்துள்ளன. இதனால், நடப்பாண்டில், அலுமினியம் உற்பத்தி, 4.70 கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற 2012ம் ஆண்டு, சர்வதேச அலுமினியம் நிறுவனங்களின் உற்பத்தி திறன், 5.40 கோடி டன்னாகவும், உற்பத்தி, 4.62 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.தற்போது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையில் இருந்து
மீள்வதற்கான அறிகுறிகள் :தென்படுவதால், நடப்பாண்டில், அலுமினியத்திற்கான தேவை, கடந்த ஆண்டை விட, 7 சதவீதம் அதிகரித்து, 4.94 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.உலகளவில், அலுமினியம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, அலுமினியம் இறக்குமதியை பெரிதும் குறைத்துள்ளது.இருந்த போதிலும், அலுமினியம் தயாரிப்பில், முக்கிய மூலப்பொருளான பாக்சைட்டிற்கு, இறக்குமதியை சார்ந்துள்ளது.
இந்தியாவில், ஹிண்டால்கோ, நால்கோ, பால்கோ, வேதாந்தா அலுமினியம் ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்கள், அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்களின் அலுமினியம் உற்பத்தி திறன், ஆண்டுக்கு, 16 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.சர்வதேச அலுமினியம் பயன்பாட்டில், போக்குவரத்து வாகன துறையின் பங்களிப்பு, 27 சதவீதமாகவும், கட்டுமான துறையின் பங்களிப்பு, 20 சதவீதமாகவும் உள்ளன.
பங்களிப்பு:பேக்கேஜிங் தொழில்களில், அலுமினியம், 15 சதவீத பங்களிப்பையும், மின்சாரம் மற்றும் இயந்திர தளவாட துறைகளில், முறையே 10 சதவீதம் மற்றும் 8 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நுகர்வோர் சாதனங்கள் துறையில், அலுமினியப் பொருள்களின் பங்களிப்பு, 7 சதவீதமாக உள்ளது.நடப்பாண்டில், வட அமெரிக்காவில், அலுமினியம் பயன்பாடு, 4 சதவீதம் உயர்ந்து, 62 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பயன்பாடு:அதே சமயம், ஐரோப்பாவில், அலுமினியம் தேவை, 1 சதவீதம் குறைந்து 65 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அலுமினியம் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே, அதன் விலை உயர வாய்ப்புள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)