தங்கம் விலை சவரனுக்கு ரூ.24  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16  குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் உள்பகுதியை பராமரிக்கும் முறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2013
14:32

கார் உள்பகுதியில் அதிகமான அளவு, மாசும், துர்நாற்றமும் ஏற்படுவது என்பது தினம் நடக்கும் விஷயம். அதனால் காரின் உட்பகுதியை தூ‌ய்மை செய்வதாலும், அதனை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் அதிக மாசு மற்றும் துர்நாற்றங்களை தவிர்க்க முடியும். பயன்பாட்டில் உள்ள காரை தினம் நாம் பராமரிப்பது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனாலும் கார் பராமரிப்பு ஓர் கலை போல பொழுதுபோக்காக மேற்கொள்ளும்போது அதன்பின் கிடைக்கும் நற்பயன்கள் அதிகம்.
காரை நிறுத்துவதற்கு ஏற்ற சிறந்த இடம் கார்
நாம் ஓட்டி கொண்டே இருப்பது அல்ல. அலுவலகமோ, வீடோ, வேறு இடமோ செல்கிறோம் என்றால் அங்கு அதனை நிறுத்துவோம்; அந்த இடம் கார் நிறுத்துவதற்கு தோதான இடம் என்பதை உறுதி செய்வது அவசியம். கார் அதிகமாக வெயிலில் நின்றால் மேற்புறம் நிறம் மங்கிவிடும். உட்புறத்தில் உள்ள கார் சீட், உற்புற பகுதியில் உரிய அல்ட்ரா வயலட் கதிரினால் பாதிப்பு ஏற்படும். எனவே நிழலில்தான் கார் நிறுத்தப்பட வேண்டும். சாலையோரம் என்றாலும் மரத்தின் கீழ் பகுதியில் நிறுத்தினால் நல்லது. காருக்கு சூரியனின் பாதிப்பு இருக்காது. நாம் உள்ளே அமர்ந்து இருந்தாலும் நல்ல குளுமையாக இருக்கும். நன்றாக மேற்புறம் மூடிய பெரியபகுதிகளில் கார் நிறுத்துவது மிகவும் நன்மையளிக்கும்.
கார் உட்புறம் தூய்மை செய்வது
காரின் உட்புறத்தில் தூய்மை செய்ய நம்மிடம் வாக்யூம் கிளீனர் இருந்தால் அதனை கொண்டு சுத்தம் செய்வது நன்றாக இருக்கும். இல்லாதவர்கள் கொஞ்சம் மென்மையான ஸ்பான்ச் கொண்டு சுத்தம் செய்திடலாம். உட்புறம் நாம் ஏற்படுத்தும் மாசுக்கள் அதிகமாக இருக்கும். அதனை சுத்தம் செய்துவிட்டால் போதும். அது போல் தலைசாய்க்கும் பஞ்சனைகளை வாக்யூம் மெதுவான காற்று மூலம் உறிஞ்சி எடுத்தால் நன்றாக சுத்தமாகும். ஸ்பான்ஜில் கொஞ்சம் ‌சோப்பு தண்ணீர் அல்லது சொலுயூஷன் கொண்டு தூய்மை செய்வது நல்லது.
டேஷ் போர்டு சுத்தம் செய்யும் போது கவனம் ‌தேவை
டேஷ் போர்டுகள் மீது மென்மையான துணியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் துடைத்து எடுக்க வேண்டும். அதிக முரடான துணிகள் கொண்டோ, அதிகமாக அழுத்தியோ துடைத்தால் டேஷ் போர்டு பிளாஸ்டிக்கில் கீறல்கள் அதிகமாக விழும். நல்ல வெளிச்சத்தில் அந்த கீறல்கள் உள்ளழகை கெடுத்துவிடும். எனவே மெதுவாக துடைப்பது
நல்லது.
குளிர்காலத்தில் பாதுகாக்க சிறந்த விரிப்புகள்
கார் உட்பகுதியில் விரிக்கும் விரிப்புகள் சிறந்ததாக இருந்தால் நல்லது. குளிர்காலத்தில் உப்பு, சேறு, மண் போன்றவையும், தண்ணீர் உள்ளே போகாமலும் பாதுகாக்க ரப்பர் வைப்பர் ஸ்டைல் மேட்கள் பயன்படுத்தலாம். இதனை எளிதாக எடுத்து கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். கார்பெட் தரைவிரிப்புகளும் நன்றாகதான் இருக்கும். அதனை சுத்தம் செய்ய வாக்யூம் கிளீனர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தரைவிரிப்புகள் மீது மேற்பூச்சு
தரைவிரிப்புகள் மற்றும் ரப்பர் மேட்கள் நன்றாக சுத்தம் செய்த பிறகு அதன் மீது ஒரு வித பூச்சு அதாவது ஈரப்பதம் இல்லாமல் இருக்க சொலுயூஷன் தடவி பின் அதனை கார் உட்புறம் போடவேண்டும்.
கதவு மற்றும் ஜன்னல்கள் அமைப்புகளில்
கதவு மற்றும் ஜன்னல்கள் மூடும் பகுதியில் உள்ள ரப்பர் பகுதிகளை சிலிக்கான் கொண்டு பூசி விட்டால் குளிர்காலத்தில் கதவு மூடி திறப்பதில் ஏற்படும் பிரச்னை இருக்காது. கதவு ஜன்னல் மூடும் ரப்பர் முத்திரை மீது ஆயில் சார்ந்த பொருளை தடவினால் சீக்கிரம் உடைந்து விடும்.
தோல் சீட்களை பராமரித்தல்
தோலினால் ஆன சீட்கள் என்றால் நாளடைவில் தேய்ந்து நிறம் மங்கும். ஆனால், அதனை சுத்தம் செய்வது சுலபம். தோல் சீட்களுக்கு ஏற்ற கிளினர் கொண்டு அதனை சுத்தம் செய்யலாம். மேலும், அதற்கான சில மேற்பூச்சு பூசினால் அதிக தேய்வு மற்றும் கிழிசல் ஏற்படாது.
துணியினால் ஆன சீட்கள்
சீட் பகுதியில் மேற்புறம் துணியினால் செய்தது என்றால் அதனை வாக்யூம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். மேலும், அதிகமாக தூசு மற்றும் கறை ஏற்பட்டால் கழற்றி துவைத்து விட்டு பின் மாற்றி கொள்ளலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)