தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்பு மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஐரோப்பிய நாடுகளின் மந்த நிலையால்... கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 15 சதவீதம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
13:52

கொச்சி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டை விட, மதிப்பின் அடிப்படையில், 10-15 சதவீதம் சரிவடையும் என, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அன்வர் ஹாசிம் தெரிவித்தார்.

பொருளாதார மந்த நிலை ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், வண்ணமே வகை மீன்கள் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதும், ஒட்டு மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறைவிற்கு காரணம் என, தெரியவந்துள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 350 கோடி டாலர் அளவிற்கும், அளவின் அடிப்படையில், 8,62,021 டன்னாகவும் இருந்தது.

ஏற்றுமதி இலக்கு: இந்நிலையில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (மெப்டா), நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 450 கோடி டாலர் மதிப்பிற்கு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், மீன் உற்பத்தியில், இந்தியா, சீனாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. சர்வதேச மீன் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், அந்நாடுகள், கடல் உணவுப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொண்டுள்ளன.

அதேசமயம், கடல் உணவுப் பொருட்களுக்கான செலவினம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல நாடுகளின் கடுமையான போட்டியையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என, ஹாசிம் தெரிவித்தார். நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், டாலர் மதிப்பு அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 41.13 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

பாகிஸ்தான் அமெரிக்காவிற்கான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில், இந்திய கடல் உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. குறிப்பாக, சீனா முதலில் பாகிஸ்தானிலிருந்து, அதிகளவில் கடல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தது. ஆனால், தற்போது, இதை குறைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில், இவற்றை ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலை வீழ்ச்சி : கடந்த ஒரு சில மாதங்களாக, சீனா, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில், மீன்களுக்கான தேவை குறைந்ததையடுத்து, இவற்றின் விலை, 25-30 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, அளவின் அடிப்படையில், 6.9 சதவீத அளவிற்கும், டாலர் மதிப்பின் அடிப்படையில், 16.6 சதவீத அளவிற்கும் குறைந்துள்ளது என, "மெப்டா' தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)