பதிவு செய்த நாள்
28 மார்2013
23:23

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடைசி நேரத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதைஅடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஜெர்மனியில் சில்லரை விற்பனை அதிகரித்துள்ளது என்ற தகவலால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், உலோகம், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 131.24 புள்ளிகள் அதிகரித்து, 18,835.77 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,882.54 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,568.43 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 40.95 புள்ளிகள் உயர்ந்து, 5,682.55 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,692.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,604.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|