வெளி சந்தையில் 1 கோடி டன் சர்க்கரைவிற்பனை செய்ய ஆலைகளுக்கு அனுமதிவெளி சந்தையில் 1 கோடி டன் சர்க்கரைவிற்பனை செய்ய ஆலைகளுக்கு அனுமதி ... நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடு நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் சாதனை:21 ஆண்டுகளில் முதன் முறையாக...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
01:27

மும்பை:இந்திய பங்குச் சந்தையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் 2,600 கோடி டாலர் (1.43 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொண்டுள்ளன. இந்தியாவில், அன்னிய நிதி நிறுவன முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட 21 ஆண்டுகளில், இந்த அளவிற்கு முதலீடு மேற்கொண்டது, இதுவே முதன் முறையாகும்.நிதி நெருக்கடி:கடந்த 1992-93ம் நிதியாண்டு முதல், மூன்று நிதியாண்டுகளில் மட்டுமே, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில், 2,000 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

இந்த வகையில், அன்னிய நிதி நிறுவனங்கள், கடந்த 2009-10ம் நிதியாண்டில், 2,340 கோடி டாலரும், 2010-11ம் நிதியாண்டில் 2,430 கோடி டாலரும், நடப்பு நிதியாண்டில், 2,600 கோடி டாலரும் முதலீடு செய்துள்ளன.ஒரு சில ஐரோப்பிய நாடுகள், மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அன்னிய முதலீட்டாளர்களின் சிறந்த தேர்வாக, இந்தியா திகழ்கிறது. அதே சமயம்,இந்திய பங்குச் சந்தையும் சிறப்பாக இருப்பதாக கூற முடியாது.
இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம், வரும் ஏப்ரலில் துவங்கும் 2013-14ம் நிதியாண்டில், நன்கு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள காரணம் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
நடப்பு மார்ச் மாதம், பெரும்பாலான பங்கு வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் தலா, 10 கோடி டாலருக்கும் (550 கோடி ரூபாய்)அதிகமாக முதலீடு செய்துள்ளன.
நடப்பு ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, சாதனை அளவாக, 1,000 கோடி டாலரை (55 ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டன.
மத்திய பட்ஜெட்:அதே சமயம், 23.80 கோடி டாலர் (1,309 கோடி ரூபாய்) மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. மத்திய பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், அன்னிய முதலீடுகள் மீதான வருவாயை பாதிக்காத வகையிலும் இருந்ததால், நடப்பு மார்ச் மாதம் இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு அதிகரித்து உள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடுகளை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், அவற்றின் முதலீடுகளை குறைத்து வருவதாக, ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.ஏனெனில், நடப்பு நிதியாண்டில், மும்பை பங்குச் சந்தையின் "சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின் "நிப்டி' குறியீட்டு எண்கள், அடிப்படையிலான முதலீட்டு வருவாய், முறையே 8.2 சதவீதம் மற்றும் 7.31 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.அன்னிய நிதி நிறுவனங்களுக்கு நேர்மாறாக, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக, நிகர அளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையில் பங்கேற்கும் நோக்கில், எல்.ஐ.சி., உள்ளிட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே சமயம், பரஸ்பர நிதி திட்டங்கள் சார்ந்த பங்கு முதலீடும் கணிசமாக திரும்ப பெறப்பட்டு உள்ளது. சென்ற பிப்ரவரி நிலவரப்படி, பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து 15,354 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன.வளர்ச்சி:இந்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருவது, நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது என, பங்குச் சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.அதே சமயம், வரும் நிதியாண்டில், அன்னிய முதலீடுகள், இதே வேகத்தில் தொடரும் என்பதை உறுதியாக கூற முடியாது.
அது, முன்னேறிய நாடுகளின் மத்திய வங்கிகள் அறிவிக்கும் நிதிக் கொள்கைகளை சார்ந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)