பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:26

மும்பை:கடந்த மூன்று மாதங்களில், இந்தியாவிற்கு வந்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 25 சதவீதம் சரிவடைந்துள்ளது என, "அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.பல்வேறு நகரங்களில் உள்ள, 1,200 சுற்றுலாப் பயண முகவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது, தெரிய வந்துள்ளது. பொருளாதார சுணக்க நிலை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளால், இந்தியாவிற்கு வருகை தரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிவடைந்துள்ளது.
சென்ற ஆண்டு, டிசம்பரில், டில்லி மாணவி ஒருவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு பிறகு, இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 35 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த ஆண்டு குளிர்காலத்தில், ஆக்ரா, ஜெய்பூர், உதய்பூர், காஷ்மீர் பள்ளத்தாக்கு, கோவா, மைசூர் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்களை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 6 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. இது, நடப்பாண்டு இதே பருவத்தில், மிகவும் குறைந்துள்ளது.சென்ற, 2012ம் ஆண்டில், இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 66 லட்சமாக இருந்தது. இவர்களின் வாயிலாக, 1,774 கோடி டாலர் (97,570 கோடி ரூபாய்) அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்ததாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|