பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:28

டோக்கியோ:அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்தியாவுக்கு, 12, 590 கோடி ரூபாய், நிதியுதவி அளிக்க, ஜப்பான் முடிவு செய்துள்ளது.அரசு முறை பயணமாக ஜப்பான் öŒன்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர், பியூமியோ கிஷிடாவை சந்தித்து @பசினார். அப்பொழுது, ஜப்பான் நிதியுதவியுடன், இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள, பல்வேறு திட்டங்கள் குறித்து, இருவரும் ஆலோசித்தனர்.
தொடர்ந்து, ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர், பியுமியோ கிஷிடா கூறுகையில், ""இந்தியாவில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஜப்பான், 12,590 கோடி ரூபாய் (232 கோடி டாலர்) நிதியுதவி வழங்கும். இது தவிர, மும்பையில், சுரங்கப்பாதை அமைக்க, 4,086.53 கோடி ரூபாயும் (75.30 கோடி டாலர்கள்) வழங்கப்படும்,'' என்றார்.மேலும், இரு நாடுகளிலும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவும், இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தவிர, இந்தியாவில், அதிவேக புல்லட் ரயில் அமைக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|