பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:34

உணவு பதப்படுத்தும் மையங்களை நவீனமயமாக்க, இதர மாநிலங்களை விட, மிகக் குறைவான நிதியை, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.உணவுப் பொருட்களை பாதுகாக்கவும், கழிவுகளைக் குறைத்து, நல்ல முறையில் அவற்றை பதப்படுத்துவதற்காகவும், நாடு முழுவதும், பல்வேறு மையங்கள் மத்திய அரசால் இயக்கப்படுகின்றன.
நவீனமயம்:இந்த மையங்களை, நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைகளை, மத்திய விவசாய அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, உணவு பதப்படுத்தும் துறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, தற்போதுள்ள மையங்களை, மேலும் மேம்படுத்தி, நவீனமயமாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்காக, மத்திய அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கென சிறப்பு திட்டம் ஒன்று தீட்டப்பட்டு, அதன் வாயிலாக, மாநில வாரியாக நிதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, பிப்ரவரி மாதம், 13ம் தேதி வரையில், எல்லா மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை, டில்லியில் விவசாய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று பார்த்தால், முதல் 10 மாநிலங்களில், தமிழகம் எட்டாவது இடத்தில் தான் உள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், மிகக் குறைவான நிதியை, தமிழகம் பெற்றுள்ளது.ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா என, வளர்ச்சியடைந்த மாநிலங்கள் வரிசையில் உள்ள தமிழகம், உணவு பதப்படுத்தும் துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இதற்கு காரணம், உணவு பதப்படுத்தும் துறையில் தமிழகம் போதிய கவனம் செலுத்தவில்லையா அல்லது மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.மற்ற மாநிலங்களைக் காட்டிலும், மிக அதிகபட்சமாக ஆந்திராவிற்கு தான், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப் :இந்த திட்டத்திற்காக, 33.74 கோடி ரூபாய், ஆந்திராவிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அடுத்த இடத்தை, பஞ்சாப் பெற்றுள்ளது. இம்மாநிலம், உணவு பதப்படுத்தும் துறைக்கு என, 17.19 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.அடுத்ததாக, மகாராஷ்டிர மாநிலம், 14.57 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கு, 13.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நடைபெறஉள்ள கர்நாடக மாநிலத்திற்கு, 10.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆறாவது இடத்தில், அரியானா உள்ளது. இம்மாநிலத்திற்கு, 9.31 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.குஜராத் :அடுத்ததாக, குஜராத் மாநிலம், 7.20 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளது. எட்டாவது இடத்தில் உள்ள, தமிழகத்துக்கு, 6.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்திற்கு, 5.74 கோடி ரூபாயும், ராஜஸ்தானுக்கு 5.23 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளன.சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு, உணவு பதப்படுத்தும் துறையை சீரமைக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள, 966 மையங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மையங்கள் அனைத்துக்கும், மொத்தமாக 145.74 கோடி ரூபாய் வரை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரியவந்து உள்ளது.- நமது டில்லி நிருபர் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|