பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:37

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, 50 வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1.43 லட்சம் கோடி குறைந்து, 10.44 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.ஏற்றம்:ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலையுடன், அதன் மொத்த பங்குகளை பெருக்கினால் கிடைக்கும் தொகை, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பாக கருதப்படுகிறது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, ஒரு நிறுவன பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தின் தாக்கம், அதன் சந்தை மதிப்பில் எதிரொலிக்கும்.இதன்படி, மதிப்பீட்டு காலாண்டில், பொது துறை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகவும், தனியார் வங்கிகளின் சந்தை மதிப்பு, 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவில், சந்தை மதிப்பை இழந்துள்ளன.அதிக அளவில், சந்தை மதிப்பை இழந்த பொது துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, முதலிடத்தில் உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இவ்வங்கியின் சந்தை மதிப்பு, 23 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.
தனியார் துறையில், எச்.டீ.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ஆகியவற்றின் சந்தை மதிப்பில், முறையே 13 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் 12 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.தனியார் துறை:பொது துறை வங்கிகளில், பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க், ஐ.டீ.பீ.ஐ., பேங்க் ஆகியவற்றின் சந்தை மதிப்பு, கணிசமாக குறைந்துள்ளது.யூகோ பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், அலகாபாத் பேங்க், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் சந்தை மதிப்பும் குறைந்துள்ளது.தனியார் துறையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களை பொறுத்தவரை, ஐ.டீ.எப்.சி., மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனங்களின் சந்தை மதிப்பு, தலா 4,000 கோடி சரிவடைந்துள்ளது.
@காடக் மகிந்திரா:எல் அண்டு டி பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், எம் அண்டு எம் பைனான்சியல் சர்வீசஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், ஐ.எப்.சி.ஐ., எச்.டீ.எப்.சி., முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு சந்தை மதிப்பை இழந்துள்ளன.அதே சமயம், மதிப்பீட்டு காலத்தில், தனியார் துறையை சேர்ந்த கோடக் மகிந்திரா பேங்க் உள்ளிட்ட மிகச் சில வங்கிகளின் சந்தை மதிப்பு ஓரளவிற்கு உயர்ந்து உள்ளது. ஆக்சிஸ் பேங்க், யெஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவற்றின் சந்தை மதிப்பு குறைந்து உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|