பதிவு செய்த நாள்
02 ஏப்2013
00:39

துடில்லி:தேசிய உணவுக் கழகத்திடம், கோதுமையை இருப்பு வைப்பதற்கு போதுமான கிடங்கு வசதி இல்லாததால், இடப்பற்றாக்குறை சமாளிக்க, மேலும் அதிக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.அனுமதி:இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சென்ற 2012-13ம் நிதிஆண்டில், தேசிய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இருந்து, 95 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.இதில், 50 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அறுவடை:இவை, முழுவதுமாக இன்னும் ஏற்றுமதி செய்யப்படவில்லை.நடப்பு ஏப்ரல் மாதம், 14ம் தேதி முதல், கோதுமை அறுவடை துவங்கும், 4.50 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய உணவுக் கழகத்தின் கிடங்குகளில், ஏற்கனவே, 90 லட்சம் டன் கோதுமை இருப்பில் உள்ளது. இதனால், கிடங்குகளில் உள்ள கோதுமையின் அளவு, 5.40 கோடி டன்னாக உயரும்.கோதுமை ஏற்றுமதி தாமதமாகியுள்ளது. அதனால், ஏற்றுமதியை விரைந்து அதிகரிக்க வேண்டும். பற்றாக்குறை:இதன் மூலம், உபரி இருப்பு குறையும். அறுவடை உச்சமடையும் போது, கிடங்குகளில் இடப்பற்றாக்குறை குறையும். கூடுதலாக, எவ்வளவு டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து, உணவு அமைச்சகம் முடிவு செய்யும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|