பதிவு செய்த நாள்
02 ஏப்2013
00:52

சேலம்:ஓட்டல் உள்ளிட்ட, வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், எரிவாயு உருளை விலை, நான்கு மாதங்களாக குறைந்து வருகிறது.சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், உள்நாட்டில் வர்த்தக உருளையின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், 19 கிலோ எடை கொண்ட உருளையின் விலை, கடந்த, 2012ம் ஆண்டு, டிசம்பரில், 1,817.50 ரூபாயாக இருந்தது.இது, நடப்பு, 2013ம் ஆண்டு ஜன., 1ம் தேதி, 52 ரூபாய் குறைந்து, 1,765.50 ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டது.பிப்ரவரி மாதத்தில், மேலும், 16.50 ரூபாய் குறைந்து, 1,749 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச், 1ம் தேதி, மேலும், 73 ரூபாய் குறைந்து, 1,676 ரூபாயாக சரிவடைந்தது.ஏப்., 1ம் தேதியான நேற்று, 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 1,666 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படுகிறது. வர்த்தக உருளையின் விலை, நான்கு மாதங்களில், 151.50 ரூபாய் வரை, குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|