பதிவு செய்த நாள்
02 ஏப்2013
00:54

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், எல்.ஐ.சி., உள்ளிட்ட, 20 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், 84,502 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 6.12 சதவீதம் சரிவாகும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், திரட்டப்பட்ட மொத்த தொகையில், 7 தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், பிரிமியம் வருவாய் பங்களிப்பு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.எஸ்.பீ.ஐ. லைப் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் நிறுவனங்களின், பிரிமியம் வருவாய், முறையே, 12.18 சதவீதம் மற்றும் 2.04 சதவீதம் குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், 24 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,509 கோடியிலிருந்து, 1,143.57 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.அதேசமயம், எச்.டீ.எப்.சி. ஸ்டாண்டர்ட் லைப் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் முறையே, 12.40 சதவீதம் மற்றும் 15 சதவீதம் அதிகரித்து உள்ளது என, "இரிடா' மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|