பதிவு செய்த நாள்
02 ஏப்2013
09:11

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் வர்த்தக நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.38 புள்ளிகள் குறைந்து 18863.37 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.65 புள்ளிகள் அதிகரித்து 5705.05 புள்ளிகளோடு காணப் பட்டது. சர்வதேச நிலவரங்களால், நாட்டின் பங்கு வியாபாரம், நடப்பு நிதியாண்டின் முதல் நாளான நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்', 0.15 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 1.40 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக, 'செபி' அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|