அமெரிக்கா போகும் ராமநாதபுரம் "ஒலைக்கா' நண்டுஅமெரிக்கா போகும் ராமநாதபுரம் "ஒலைக்கா' நண்டு ... நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்களிக்க வேண்டும்: மன்மோகன் நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்களிக்க வேண்டும்: மன்மோகன் ...
மின்வெட்டு, போட்டி அதிகரிப்பால்...தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
00:19

மின் தடை மற்றும் சென்ற மார்ச் மாதத்தில், பெய்த மழைப் பொழிவால், நடப்பு 2013ம் ஆண்டில், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி, 17-18 லட்சம் டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான, பல விவசாயிகள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திற்கான மொத்த உப்பு தேவையில், 70 சதவீத அளவிற்கும், நாட்டின் உப்பு தேவையில், 30 சதவீத அளவிற்கும் தூத்துக்குடியில் இருந்தே பெறப்படுகிறது.
ஏற்றுமதி:கடந்த ஒரு சில ஆண்டுகளாக, தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியும், இதன் ஏற்றுமதியும் சிறப்பாக இருந்தது. ஆனால், சர்வதேச அளவில், ஏற்பட்டுள்ள போட்டி மற்றும் விலை சரிவினால், தூத்துக்குடியில் இருந்து மேற்கொள்ளப்படும் உப்பு ஏற்றுமதி குறைந்து வருவதாக, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் ஏ.ஆர். ஏ.எஸ். தனபாலன் தெரிவித்தார்.
சென்ற 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், தூத்துக்குடியின் உப்பு ஏற்றுமதி, 15 சதவீதம் சரிவடைந்துள்ளதாக,தூத்துக்குடி துறைமுகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா:கடந்த 2011-12ம் நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான காலத்தில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, 1.32 லட்சம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, சென்ற 2012-13ம் நிதியாண்டின் இதே காலத்தில், 1.08 லட்சம் டன்னாக (18 சதவீதம்) குறைந்துள்ளது.தூத்துக்குடியிலிருந்து, சென்ற நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இந்தோனேஷியாவிற்கு, 45 ஆயிரம் டன் உப்பு ஏற்றுமதியானது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 82,175 டன்னாக இருந்தது.
கணக்கீட்டு காலத்தில், இந்தோனேஷியா தவிர, வங்கதேசம் (38,750 டன்), மலேசியா (27,998 டன்) ஆகிய நாடுகளும், தூத்துக்குடியிலிருந்து உப்பை இறக்குமதி செய்து கொண்டு உள்ளன.சென்ற மார்ச் மாதம் பெய்த மழையால், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி, 2 லட்சம் டன் அளவிற்கு குறைந்து போனது என, தனபாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து, எம்.எஸ்.ஏ. சால்ட் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் எம்.எஸ்.ஏ. பீட்டர் ஜெபராஜ் கூறியதாவது:தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைவிற்கு, மேற்கண்டவை தவிர, குஜராத் மற்றும் ஆஸ்திரேலியாவின் போட்டியும் முக்கிய காரணமாகும்.
குஜராத்:குறிப்பாக, இந்தியாவில் உப்பு உற்பத்தியில், மிகப் பெரிய மாநிலமாக திகழும், குஜராத்தில் ஒரு டன் உப்பு உற்பத்திக்கான செலவினம், 150 ரூபாயாக உள்ளது. அதேசமயம், தூத்துக்குடியில், ஒரு டன் உப்பு உற்பத்திக்கு, 450 ரூபாய் செலவாகிறது. ஏனெனில், குஜராத் மாநிலத்தில், உயரமாக எழும்பும் கடல் அலைகளின் நீர் சேமிக்கப்பட்டு, பின்பு உப்பளங்கள் வாயிலாக உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், தூத்துக்குடியில், நிலத்தடி நீர், மின்சார மோட்டார் பம்புகள் மூலம், உப்பளங்களில் இறைக்கப்பட்டு உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
மின் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர் சம்பளம் போன்றவற்றால் இங்கு உற்பத்தி செலவு அதிகரிக்கிறது.கடந்த ஓராண்டிற்கு முன்பாக, தூத்துக்குடியில், ஒரு டன் உப்பு, 1,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது தற்போது, 800 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.இவ்வாறு ஜெபராஜ் தெரிவித்தார்.
கடந்த 2012ம் ஆண்டில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 25 ஆயிரம் ஏக்கரில், 21 லட்சம் டன் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. இது, 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உப்பு உற்பத்தியை (15-16 லட்சம் டன்), 31 சதவீதம் அதிகமாகும்.
திருப்பூர்:முன்பு, திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளுக்கு, தூத்துக்குடியிலிருந்து, நாள் ஒன்றுக்கு, 500 டன்னுக்கும் அதிகமாக, சுத்திகரிக்கப்பட்ட உப்பு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, இங்கிருந்து அனுப்பப்படும் உப்பு முற்றிலும் நின்று போயுள்ளது. இதுவும், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என, தனபாலன் மேலும் கூறினார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)