இணையதள விளம்பரம் ரூ.2,938 கோடியாக உயரும்இணையதள விளம்பரம் ரூ.2,938 கோடியாக உயரும் ... சர்க்கரை விலை குறைவு வரும் நாட்களிலும் நீடிக்குமா? சர்க்கரை விலை குறைவு வரும் நாட்களிலும் நீடிக்குமா? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்கம் கிடைக்காமல் திண்டாடும் நகை நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
00:21

சென்ற நிதியாண்டில், தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள போதிலும், தென்னிந்திய நகை தயாரிப்பு நிறுவனங்கள், ஆபரணங்கள் தயாரிப்புக்குத் தேவையான தங்கம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.
தமிழகம்:குறிப்பாக, தமிழகத்தில் கோவை, கேரளாவில் திருச்சூர், கொச்சி ஆகிய நகரங்களில் உள்ள நகை நிறுவனங்களுக்கு போதுமான அளவிற்கு தங்கம் கிடைக்காத நிலை உள்ளது.இந்தியாவில், ஓராண்டில் தங்கத்திற்கான தேவையில், மேற்கண்ட நகரங்களில் உள்ள நகை நிறுவனங்களின் தேவை, 15 - 20 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு, தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்ய, வங்கிகள் மற்றும் மிகப் பெரிய பொது துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. சில தனியார் நிறுவனங்களும், தங்க கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றை சில்லரையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இவற்றுக்கு, பிராந்திய அளவில் இயங்கும் சிறிய நகை நிறுவனங்களுக்கு, தங்கத்தை விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் உள்ளன.இதன் காரணமாகவே, கோவை, திருச்சூர், கொச்சி போன்ற நகரங்களில் உள்ள சிறிய நகை நிறுவனங்களுக்கு, போதுமான அளவிற்கு தங்கம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைவர் மெகுல் சோக்ஸி கூறியதாவது: வலுவான நிதி ஆதாரம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, தங்க நகை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, தங்கம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தென்னிந்தியாவில் உள்ள சிறிய நிறுவனங்கள் தான் தங்கம் கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு சோக்ஸி கூறினார்.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக் குறையை சமாளிக்க, மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 4 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக உயர்த்தியது.
இறக்குமதி : எனினும், தங்கம் இறக்குமதி குறையவில்லை. கடந்த நிதியாண்டில், டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், இறக்குமதியான தங்கத்தின் மதிப்பு, 3,780 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இது, சி.ரங்கராஜன் தலைமையிலான, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின், முழு நிதியாண்டு மதிப்பீடான 3,600 கோடி டாலரை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2012ம் ஆண்டில், தங்கம் இறக்குமதி, 864 டன்னாக இருக்கும் எனவும், இது, நடப்பு 2013ம் ஆண்டில், 865 - 965 டன்னாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போது, தங்க ஆபரணங்களின் விலை குறைந்து வருகின்ற போதிலும், திருமண காலம் வருவதை முன்னிட்டு, அதன் விலை மீண்டும் உயரும் என, நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)