பதிவு செய்த நாள்
19 ஏப்2013
02:22

மும்பை:சர்வதேச அளவில்,தங்கம் விலை வீழ்ச்சிகண்டுள்ளதால், ரிசர்வ் வங்கியிடம் இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 29 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2,417 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இழப்பு:கடந்த, 2011ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை, 1,900 டாலராக இருந்தது. இது, கடந்த, 26 மாதங்களில் இல்லாத அளவாக, நடப்பு வார துவக்கத்தில், 1,347 டாலராக சரிவடைந்தது.இதே காலத்தில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள, 557.75 டன் தங்கத்தின் மதிப்பு, 29 சதவீதம் சரிவடைந்து, 2,417 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
எனினும், இந்தியா,தங்கம் வாங்கிய போது, நிலவிய விலையுடன்ஒப்பிடும்போது, இதை, உத்தேச இழப்பாகவே கருத முடியும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர். கடந்த, 10 ஆண்டுகளில், தங்கம் விலை உயர்ந்து உள்ளதால், இந்தியா, தங்கம் வாங்கியதற்கான சராசரி செலவினத்தை கணக்கிட்டால் கூட, அது ஆதாயம் அளிப்பதாகத்தான்இருக்கும் என, அவர்கள் மேலும் கூறினர்.
சென்ற புதன் அன்று,சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1.32 சதவீதம் உயர்ந்து, 1,386 டாலராக அதிகரித்து இருந்தது.இந்த விலையுடன்ஒப்பிட்டால், 2011ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து, நடப்பு, 2013ம் ஆண்டு ஏப்., 17ம் தேதி வரையிலான காலத்தில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு, 27சதவீதம் சரிவடைந்து, 2,485 கோடி டாலராக உள்ளது.கடந்த, 1990களின்மத்தியில் இருந்து, ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி உள்ளிட்ட, மொத்த சொத்துக்களின் கையிருப்பில், தங்கத்தின் பங்களிப்பு குறைந்துவருகிறது.
கையிருப்பு:கடந்த, 1994ம் ஆண்டு, ரிசர்வ் வங்கியின் மொத்த கையிருப்பில், தங்கத்தின் பங்கு, 20 சதவீதமாக இருந்தது. இது, 2008ம் ஆண்டு இறுதியில், 2.98 சதவீதமாக சரிவடைந்தது. இது, 2009ம் ஆண்டு, ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதியத்திடம் இருந்து, 200 டன் தங்கம் வாங்கியதை அடுத்து, 8 சதவீதமாக உயர்ந்தது.ரிசர்வ் வங்கியை போல், உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் சொத்து மதிப்பும், தங்கம் விலை வீழ்ச்சியால்சரிவடைந்துள்ளன.
சென்ற புதன்கிழமை நிலவரப்படி, உலக நாடுகளிடம், 31,695 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மதிப்பில், 19 சதவீதம், அதாவது, 56 ஆயிரம் கோடி டாலர் குறைந்து உள்ளது.கடந்த, 1991ம் ஆண்டு, இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 120 கோடி டாலர் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது. இதனால், அன்னியச் செலாவணி வாயிலான பணப் பரிவர்த்தனையில் சிக்கலை சந்திக்க நேரிட்டது.
அடமானம்:இதையடுத்து, ரிசர்வ் வங்கி, 67 டன் தங்கத்தை யூனியன் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து, பேங்க் ஆப் இங்கிலாந்து ஆகியவற்றிடம் அடமானம் வைத்து, 60.50 கோடி டாலரை திரட்டி, ஓரளவு நிலைமையை சமாளித்தது. தற்போது ரிசர்வ் வங்கியிடம், அன்னியச் செலாவணி கையிருப்பு, 29,300 கோடி டாலராக உயர்ந்து உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|