வர்த்தக பற்றாக்குறை ரூ.10.50 லட்சம் கோடி:ஏற்றுமதியை அதிகரிக்க சலுகைகள்வர்த்தக பற்றாக்குறை ரூ.10.50 லட்சம் கோடி:ஏற்றுமதியை அதிகரிக்க சலுகைகள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2013
08:58

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என, ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 72 சதவீதத்துடன், 8 சதவீதம் உயர்த்தி, 80 சதவீதமாக வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, ஜனவரி 1ம் தேதி முதல், கணக்கிட்டு வழங்கப்படும். இதனால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில், 10 ஆயிரத்து, 67 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த உயர்வின் மூலம், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வு, 50 சதவீதத்தை தாண்டும்போது, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது நடைமுறை. இதற்காக, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும். இவற்றுடன், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எச்.எம்.டி., நிறுவனத்தை புனரமைக்க, 1,083 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பீகார் மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை திட்டத்திற்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)