பதிவு செய்த நாள்
19 ஏப்2013
15:29

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது என்ற நிலைமாறி வாகன பயணமே ஒரு இனிமையான சொகுசான அனுபவமாக மாறிவிட்டதற்கு காரணம் வாகனங்களில் இருக்கும் பல வித அம்சங்கள். அதில் ஒன்றுதான் கார் ஏர் கண்டீஷனர். குளுகுளு பயணத்திற்கு வழிவகுக்கும் கார் ஏசிக்களில் பலவித மாறுதல்களும் முன்னேற்றங்களும் தொழில்நுட்ப அளவில் ஏற்பட்டுக் கொண்டே வந்துள்ளது.
இன்றைய ஏசிகள் ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்தக்கூடிய விஷ வாயுவான க்ளோரோ ஃப்ளோரோகார்பனை' வெளியிடுவதில்லை. இதுன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றத்தால் இன்றைய ஏசிகள் சுற்றுச்சூழலுக்கு ஒத்த மாசற்ற முறையில் இயங்கும் R134A என்ற ரெஃப்ரிஜரென்ட்டை கொண்டுள்ளது.
1940 ஆம் ஆண்டு முதல் உபயோகத்தில் உள்ள கார் ஏசியில் வசதி மற்றும் சொகுசிற்கான பல அம்சங்கள் கூடிக் கொண்டே வந்துள்ளது.
இன்றைய ஏசி குளிர்ச்சியை அளிப்பது மட்டுமின்றி "ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் செட்-அப் சிஸ்டம்' உடன் வருகிறது. இதில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் காரின் உள் இருக்கும் நபர்கள் மற்றும் வெளியில் உள்ள சீதோஷண நிலையின் மாறுபாடு மற்றும் உட்புற தட்பவெப்பத்தை கணித்து அதற்கேற்ப தானாகவே தேவையான குளிர்ச்சியை கூட்டுவதையோ குறைப்பதையோ இத்தொழில்நுட்பம் செய்கிறது.
கார் ஏசியில் உள்ள பாகங்களும் அதன் செயல்பாடும்: கார் ஏசியென்றால் அதில் உள்ளவை கம்ப்ரெஸ்ஸர், கன்டென்சர், ரிசீவர் ட்ரையர், தெர்மோஸ்டாட் வால்வு
மற்றும் எவாபரேட்டர். ஏசியின் வேலை சூடான காற்றை எடுத்துக் கொண்டு குளிர்ச்சியான காற்றை கொடுப்பதாகும். ஏசியில் இருக்கும் கம்ப்ரெஸ்ஸரில் இருக்கும் ரெஃப்ரிஜரன்ட் (134) மூலம் அழுத்தப்பட்ட வெப்பத்தை கன்டென்சருக்கு அனுப்புகிறது.
கம்ப்ரெஸ்ஸர் தான் ஏசியின் பவர் ஹவுஸ். இது என்ஜினின் ட்ரைவ் பெல்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். கம்ப்ரெஸ்ஸர் அனுப்பும் அழுத்தம் கொண்ட வெப்பத்தை திரவமாக மாற்றி ரிசீவர் ட்ரையருக்கு அனுப்பும். ரிசீவர் ட்ரையர் இத்திரவத்திலுள்ள ஈரப்பதத்தை எல்லாம் உறிஞ்சிக் கொள்ளும். கம்ப்ரெஸ்ஸர் மேலும் அழுத்தத்தை உண்டு செய்ய, ஈரப்பதமற்ற வெப்ப திரவம் தெர்மோஸ்டாட் வால்வை வந்தடையும். இங்கு அதில் உள்ள அழுத்தம் முழுமையாக நீக்கப்பட, இந்த குறைந்த அழுத்த ரெப்ரிஜரென்ட் எவாப்பரேட்டருக்கு சென்று அங்கிருந்து ஏசி வென்ட்கள் மூலம் "பிளோமீட்டரால்' குளிர் காற்றாக பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இக்குளிர் காற்று காரை குளிர்ச்சியாக்குகிறது.
கம்ப்ரெஸ்ஸரில் உள்ள ரெப்ரிஜரென்ட் அளவு குறைந்தாலும் சரியாக வேலை செய்யவில்லையென்றாலோ ப்ரச்சனைகள் வரலாம். ஏசி வென்ட்களில் அடைப்பு இருந்தாலும், தூசி தங்கினாலும் கூட போதுமான குளிர்ச்சி கிடைக்காமல் தடை ஏற்படலாம். ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்து பராமரித்தால் குளுகுளு பயணம் இனிமையாய் கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|