பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:41

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் சேவை துறையில், அன்னிய நேரடி முதலீடு, 466 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 483 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், சேவை துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 3.5 சதவீதம் சரிவடைந்துள்ளது என, மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதன் காரணமாகவே, சேவை துறையில் முதலீடு மேற்கொள்வதில், முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவை துறையின் பங்களிப்பு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த அன்னிய நேரடி முதலீடு, 39 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,910 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|