பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:45

மும்பை:தங்கம் விலை நிலவரத்தில், தற்போது ஏற்பட்டிருக்கும் விலை சரிவில் இருந்து, ஒரேயடியாக விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. கடந்த வாரத்தில் இருந்தது போல், விலை சரிவு அதிகமாக இருக்காது என்றாலும், ஸ்திரமான நிலையில் இருக்கும். 10 கிராம் தங்கம், 25,500 ரூபாய் முதல் 26,500 ரூபாய்க்குள், விலை மாறி மாறி இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.தங்கம் விலை வரலாறு காணாத வகையில், 15 மாத காலத்தில் இல்லாத, குறைந்த பட்ச விலையை தொட்டது.
இந்த விலை உயர்வை பயன்படுத்தி, தங்கத்தை வாங்கி குவிக்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகை கடைகளில், அட்சய திருதியை கூட்டத்தை மிஞ்சும் வகையில், கூட்டம் அலை மோதுகிறது.அதுமட்டும் அல்ல, பழைய தங்கத்தை கொடுத்து விட்டு, புதிய நகை வாங்குவது திடீரென குறைந்திருக்கிறது. இதனால் கடைகளில் உள்ள, "ஸ்டாக்' குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.ஆனால், பொருள் சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி இறங்குமுகம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தையில், 31 கிராம் கொண்ட, 1 அவுன்ஸ் தங்கம், 1,340 முதல் 1,410 அமெரிக்க டாலர் என்ற விலையிலும், உள்நாட்டு சந்தையில், 10 கிராம், 25,500 ரூபாய் முதல் 26,500 ரூபாய் வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு, அதிகரிக்கும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் குறையலாம்.
மும்பை தங்க மார்க்கெட் சங்க தலைவர், மோகித் காம்போஜ் கூறுகையில், ""தங்கத்தின் விலை, 10 கிராம், 26,200 ரூபாய் என்ற அளவில் உயரலாம். வரும் வாரத்தில், இந்தியாவுக்கு, 4.8 டன் தங்கம் இறக்குமதியாவதற்கு சுங்கத் துறை அனுமதியளித்துஇருக்கிறது. இது தங்கம் தேவையை சமாளிக்க உதவும்,'' என்றார்.
இதற்கிடையே, ""தங்கம் விலை குறைவால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.3 சதவீதத்திலிருந்து, 3.9 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது,'' என, பொருளாதார வல்லுனரான, இந்திரானில் செங்குப்தா கூறினார்.மத்திய அரசின், நிதி சேவை செயலர், ராஜிவ் தக்ரு கூறுகையில், ""தங்கம் விலை மேலும் சரிந்தால், தங்கத்திற்கு ஈடாக கடன் வழங்கியுள்ள வங்கிகள், தங்க அடமான கடன்களை மறு ஆய்வு செய்யும்,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|