மதுரையில் மீன்விலை அதிகரிப்புமதுரையில் மீன்விலை அதிகரிப்பு ... இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் ...
விண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520 கடைகளில் கிடைக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2013
12:16

ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520, இந்தியா முழுவதும் மொபைல் போன் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக, நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.10,499 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய விற்பனை தளங்களின் மூலம், முதலில் இந்த போனுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டன. இந்த போனை வாங்குபவர்களுக்கு, முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 1 ஜிபி இலவச 3ஜி டேட்டா தரவிறக்கம் செய்திட வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ரிலையன்ஸ் காம் வாடிக்கையாளர்கள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் தளங்களை இரண்டு மாதங்களுக்கு எந்தவித கால மற்றும் டேட்டா வரையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8 போன் வரிசையில், அனைவரும் வாங்கும் விலையில் வெளியான போன் லூமியா 520. இந்த ஆண்டு தொடக்கத்தில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு பரிமாணத்தில் அமைந்த கடினமான கண்ணாடியில் அனைந்த நான்கு அங்குல வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விண்டோஸ் 8 போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 5 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, ஹை டெபனிஷன் வீடியோ பதிவினைத் தருகிறது. 9.9. மிமீ தடிமன் கொண்டது. 512 எம்பி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. கூடுதலாக, ஸ்கை ட்ரைவில், 7 ஜிபி வரை டேட்டா ஸ்டோரேஜ் செய்திட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்ப டூல்களைக் கொண்டுள்ளது. இதன் 1430 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 9.6 மணி நேரம் பேச வாய்ப்பளிக்கிறது. மின்சக்தி 360 மணி நேரம் தங்குகிறது. மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)