இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர்இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் ... பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உயர்த்தப்பட்ட சொகுசு கார் வரியைதிரும்ப பெற அமைச்சகம் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
00:54

புதுடில்லி:சொகுசு காருக்கு உயர்த்தப்பட்ட, 3 சதவீத உற்பத்தி வரியை திரும்பப் பெற வேண்டும் என, நிதியமைச்சகத் திற்கு, மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சர் பிரபுல் படேல் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது:
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், "எஸ்.யு.வி' எனப்படும், பன்முக பயன்பாட்டு வாகனங்களுக்கான உற்பத்தி வரி, 27 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட வரியை திரும்பப் பெற வேண்டும் அல்லது 10 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கு, கூடுதல் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன துறையின் வளர்ச்சி குன்றியுள்ளது. வரி உயர்வால், இது மேலும் பாதிப்பிற்கு உள்ளாகும். கிராமப் புறங்கள் மற்றும் புற நகரங்களில் "எஸ்.யு.வி' வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அப்பகுதிகளை சேர்ந்த நுகர்வோர், வரி உயர்வால் பாதிக்கப்படுவர்.பன்முக பயன்பாட்டு வாகனம் என்பதற்கான அளவீடு, மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, வாகன வரி உயர்வை நிதி அமைச்சகம் கைவிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற மார்ச்சில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. சென்ற பிப்ரவரியில், பயணிகள் கார் விற்பனை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.எரிபொருள் விலை உயர்வு, வட்டி அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், வாகன துறையின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)