தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மஹிந்திரா எலக்ட்ரிக் கார் இ2ஓ டில்லியில் அட்டகாச அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
13:56

பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும், ரெவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை, 2010ம் ஆண்டு மே மாதம், மஹிந்திரா நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதன் பிறகு, சிறந்த எலக்ட்ரிக் காரை உருவாக்க, 100 கோடி ரூபாயை முதலீடு செய்தது. பெங்களூருவில், ஆண்டுக்கு, 30 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு, தொழிற்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், மார்ச்,18ம் தேதி, "இ2ஓ' என்ற பெயரில், புதிய எலக்டரிக் காரை, மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இரண்டு கதவுகள் கொண்ட, இந்த காரில், ஒரே நேரத்தில், நான்கு பேர் பயணம் செய்ய முடியும். புதிய தலைமுறை லித்தியம் -ஐயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 3 பேஸ் இன்டக்ஷன் எலக்டரிக் மோட்டாரும், இந்த காரில் உண்டு. ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த காரில், 100 கி.மீ., தூரம் வரை பயணம் செய்யலாம். முழு சார்ஜ் செய்ய, ஐந்து மணி நேரமாகும். முழு ஆட்டோமேடிக் காரான"இ2ஓ', நகர போக்குவரத்துக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும்.
இந்த காரில், ஜி.பி.எஸ்., நேவிகேஷன் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. டில்லியில், எலக்டரிக் காருக்கு, மாநில அரசு, 20 சதவீத மானியம் வழங்குகிறது. எனவே, டில்லியில், இந்த காரின் ஆன் ரோடு விலை 5.96 லட்சம். இது, "டிஓ' என்ற வேரியன்ட்டுக்கான விலை. "டி1' வேரியன்ட்டின் விலை 6.24 லட்சம் ரூபாய். வீடு, அலுவலகம் என, எங்கு வேண்டுமானாலும், எலக்டரிக் காரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இன்னும் சில வாரங்களில், மும்பை, பெங்களூரு, புனே, அஹமதாபாத், ஹைதராபாத், சண்டிகர் மற்றும்கொச்சி நகரங்களில், "இ2ஓ' எலக்ட்ரிக் கார், அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய, புதிய மற்றும் மாற்ற தக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சகம் சார்பில், இதற்கு முன், எலக்டரிக் கார்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, மானியம் அளித்து வந்தது. இந்த திட்டம், 2012ம் ஆண்டு, மார்ச், 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம் - ஐயன் பேட்டரிகளுக்கு மட்டும், வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. முன்பு போல, மானியம் வழங்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)